The Lion and the Mouse

Short stories for kids in Tamil The Lion and the Mouse சிங்கமும் பூனையும் - சிறுகதை ஒரு அடர்ந்த காட்டுக்குள் பெரிய சிங்கம் ஒன்று படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு சிறிய எலி வந்து சிங்கத்தின் மேல் ஏறி நின்று விளையாடியது. உடனே அந்த சிங்கம் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டது. கோபமடைந்த சிங்கம், எலியை சாப்பிடுவதற்காக அதனை துரத்தியது. எலி, "என்னை மன்னித்துவிடுங்கள்! என்னை ஒன்றும் செய்யாதீர்கள்!" என்று கூறியது மட்டுமல்லாமல், "உங்களுக்கு ஏதாவது உதவி என்றால் நான் உங்களுக்கு கண்டிப்பாக உதவுகிறேன்" என்று கூறியது. அதற்கு சிங்கம், "நீயே உருவத்தில் சிறியதாக இருக்கிறாய். எனக்கு எப்படி நீ உதவ முடியும்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டு, "இந்த ஒரு முறை நான் உன்னை மன்னித்து விடுகிறேன். மறுபடியும் இதை செய்யாதே" என்று எலியை எச்சரித்தது. சில நாட்களுக்குப் பிறகு வேட்டைக்காரன் ஒருவன் அந்த காட்டிற்குள் வந்தான். காட்டிற்குள் இருக்கும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக, ஒரு வலையை அமைத்தான். அப்போது எதிர்பாராத விதமாக சிங்கம் அந்த வலைக்குள் சிக்கியது...