The Lion and the Mouse

Short stories for kids in Tamil

The Lion and the Mouse

சிங்கமும் பூனையும் - சிறுகதை


ஒரு அடர்ந்த காட்டுக்குள் பெரிய சிங்கம் ஒன்று படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு சிறிய எலி வந்து சிங்கத்தின் மேல் ஏறி நின்று விளையாடியது. உடனே அந்த சிங்கம் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டது.

கோபமடைந்த சிங்கம், எலியை சாப்பிடுவதற்காக அதனை துரத்தியது. 
எலி, "என்னை மன்னித்துவிடுங்கள்! என்னை ஒன்றும் செய்யாதீர்கள்!" என்று கூறியது மட்டுமல்லாமல், "உங்களுக்கு ஏதாவது உதவி என்றால் நான் உங்களுக்கு கண்டிப்பாக உதவுகிறேன்" என்று கூறியது.

அதற்கு சிங்கம், "நீயே உருவத்தில் சிறியதாக இருக்கிறாய். எனக்கு எப்படி நீ உதவ முடியும்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டு, "இந்த ஒரு முறை நான் உன்னை மன்னித்து விடுகிறேன். மறுபடியும் இதை செய்யாதே" என்று எலியை எச்சரித்தது.

சில நாட்களுக்குப் பிறகு வேட்டைக்காரன் ஒருவன் அந்த காட்டிற்குள் வந்தான். காட்டிற்குள் இருக்கும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக, ஒரு வலையை அமைத்தான். அப்போது எதிர்பாராத விதமாக சிங்கம் அந்த வலைக்குள் சிக்கியது. "என்னை காப்பாற்றுங்கள்!" என்று கர்ஜித்தது. 

இதைக் கேட்ட அந்த எலி "ஐயோ! இது நம் அரசரின் குரல் ஆயிற்றே. அரசரே ஏதோ ஆபத்தில் உள்ளார் போல தெரிகிறது. அவரை உடனடியாக சென்று காப்பாற்ற வேண்டும்." என்று கூறி சிங்கம் இருக்கும் இடத்திற்கு விரைந்து. 

சிங்கம் வலைக்குள் இருப்பதைப் பார்த்தது. மரத்தில் ஏறி வலையில் இருக்கும் கயிறுகளை தனது வாயால் கடித்து பெரிய துளையை உருவாக்கியது. அந்த துளை வழியாக வலையில் இருக்கும் சிங்கம் கீழே குதித்தது. 

"நீ உருவத்தில் சிறியதாக இருக்கிறாய் என்று உன்னை தவறாக எடை போட்டு விட்டேன். என்னை மன்னித்து விடு எலியாரே!  என்னை காப்பாற்றியதற்கு மிக்க நன்றி!!!" என்று சிங்கம் கூறியது. பின்னர் இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

நீதி: ஆபத்துக்காலத்தில் உதவுபவனே நண்பன்.

Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil