காகமும் நாகமும்

காகமும் நாகமும்

ஒரு ஊரில் காகம் ஒன்று ஆலமரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அப்போது அதற்கு பயங்கரமாக பசி எடுத்தது. அதனால் காகம் இரை தேடச் சென்றது.
அப்போது திடீரென்று பாம்பு ஒன்று வந்து கூண்டில் உள்ள முட்டைகளை உடைத்தது. உடைந்த முட்டைகளை பார்த்த காகம் வருத்தம் அடைந்தது.

பிறகு தனது நண்பன் ஓநாயிடம், "நண்பனே! அந்தக் கொடிய
பாம்பை அழிப்பதற்கு ஒரு
வழி சொல்" என்று கேட்டது. அதற்கு ஓநாய், "அரசியாரின் விலையுயர்ந்த பொருள் ஏதாவது ஒன்றை
எடுத்துக் கொண்டு வந்து பாம்பு பொந்திற்குள் போட்டுவிடு" என்று கூறியது.

"சரி! நீ சொன்னபடியே கொண்டுவந்து போடுகிறேன். அப்படிப் போட்டால் என்ன நடக்கும்?" என்று ஓநாயிடம் கேட்டது. அதற்கு ஓநாய், "முதலில் நீ கொண்டுவந்து போடு. அப்புறம் என்ன
நடக்கிறது என்று பார்!" என்று கூறியது.

அதற்காக காகம் அரண்மனைக்கு சென்றது. இளவரசி தன் தோழிகளுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருக்க, கரையில் முத்துமாலை இருப்பதை
காக்கை பார்த்துக் கொண்டிருந்தது. காக்கை, இளவரசியின் முத்துமாலையை கொத்திக்கொண்டு பறந்தது.

அதைப் பார்த்த இளவரசி, "யாரங்கே? … அந்தக் காகம் என் முத்துமாலையை
எடுத்துச்செல்கிறது அதைப் பிடியுங்கள்" என்று ஆணையிட்டாள்.

காவலர்கள் வேல்களுடன் காக்கையை துரத்திக் கொண்டு ஓடினர். அங்கிருந்து வேகமாக பறந்த காக்கை, முத்துமாலையைப் பாம்பு இருக்கும் மரப்பொந்தில் போட்டது.

அப்போது திடீரென்று அந்தப் பொந்திலிருந்து பாம்பு தலையை
வெளியே நீட்டியது. பிறகு காவலர்கள் பொந்திலிருந்து பாம்பை மிகவும் தைரியமாக அகற்றினர்.

பிறகு பொந்திலிருந்து முத்துமாலையை  எடுத்தனர். முத்துமாலையை இளவரசியிடம் வீரர்கள் கொடுத்தனர். இளவரசி வீரர்களுக்கு நன்றி தெரிவித்தாள். காகம் பாம்பின் தொல்லை இல்லாமல்
மகிழ்வுடன் வாழ்ந்தது.

நீதி: பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ வேண்டும்.

Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil