இளமையில் கல்
இச்சிறுகதை கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும்
கூட்டம். வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பைக் கேட்ட ராமமூர்த்தி, தம் கடையைப் பூட்டிவிட்டுக் கூட்டத்திற்குச் சென்றார்.
ஊராட்சி மன்ற தலைவர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வேற்றுப்
பேசினார். சிறு தொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்துப் பேசினார். இத்திட்டத்தின்கீழ் யார் யாருக்கெல்லாம் உதவித்தொகை வந்திருக்கிறதோ அவர்களின் பெயர்களைப் படித்தார்.
ராமமூர்த்தி தம்முடைய பெயர் வருகிறதா என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால், கடைசி வரை அவர் பெயர் வரவேயில்லை.
ராமமூர்த்தி, தலைவரிடம் சென்றார். “ஐயா! எனக்கு ஏன் உதவித்தொகை இல்லை? நானும் ஒரு ஏழை தான். ஒரு வேளை சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்படுகிறேன…..“ என்று கேட்டார்.
“யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் மூலம் பண உதவி வேண்டுமோ, அவர்களுக்கான கூட்டம் பற்றி உங்களுக்கு தபால் மூலம் கூறி இருந்தோமே.! நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?“ என்றார் தலைவர். “ஆமாம். போன வாரம் அஞ்சல்காரர் கொடுத்தார். படிக்கத் தெரியாததால் அப்படியே
வைத்துவிட்டேன்“.
“என்னப்பா! உனக்குத்தான் படிக்கத் தெரியல, ஆனா, உம்பையன்தான் பள்ளியிலே படிக்கிறானே, அது எப்படி தெரியாமல் போகும்?"
ராமமூர்த்தி சற்றுக் குற்ற உணர்வோடு தலை குனிந்தபடி கூறினார், “ஐயா! நான் மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கிறேன். எனக்கு உதவி செய்வதற்காக, அவனை அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்கச் சொல்வேன். சில சமயங்களில் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனால்தானோ என்னவோ அவனுக்குச் சரியாக எழுதவும் படிக்கவு தெரியாமலே
போய்விட்டது. அவனுடைய ஆசிரியரும் இதைப்பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார். பள்ளிக்குத்தொடர்ந்து அனுப்புமாறு அறிவுரையும் கூறுவார். நான்தான்
தப்பு செய்துவிட்டேன். என் பிள்ளையின் படிப்பறிவை இப்படி ஆக்கிவிட்டேன்.“ என்று கவலையுடன் கூறினார் ராமூர்த்தி.
“உங்கள் அறியாமையால் இப்போது என்னவாயிற்று பார்த்தீர்களா? அரசின் உதவித் தொகையை உங்களால் பெற முடியாமல் போய்விட்டதே. படிப்பு அறிவு இருந்தால் மட்டும் தான் அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள முடியும். நம்மையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். கல்வி, தொழிலுக்கு வழிகாட்டுகிறது. வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுகிறது. இப்போதாவது புரிந்து
கொண்டீர்களா? “ஐயா! இப்ப நான் நன்கு புரிந்து கொண்டேன். நான்தான் கல்வி கற்காமல் இருந்து
விட்டேன். என் மகனாவது நன்கு படித்து வாழ்வில் முன்னேறட்டும். இனி நான் என் மகனை வேலைக்கு அனுப்ப மாட்டேன். இப்போதே என் மகனை அழைத்துச் சென்று பள்ளி முதல்வரிடம் மீண்டும் என் மகனை பள்ளியில் சேர்த்துக்கொள்ளுமாறு நான் வேண்டிக்கொள்வேன்.
புரிந்து கொண்டால் சரிதான். உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால நீங்க மட்டும் தெரிந்துகொண்டால் போதாது. நம் கிராம மக்கள் அனைவருமே அறியாமை என்னும் இருளை விட்டு நீங்கி, கல்வி அறிவு குறித்த விழிப்புணர்வு பெறவேண்டும். கல்வியின் தேவையை எடுத்துக்கூறிய பைத் தலைவருக்கு, நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் ராமமூர்த்தி.
நீதி: கல்வி கண் போன்றது
Comments
Post a Comment