இச்சிறுகதை கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறிஞ்சி கிராமத்திலுள்ள அலுவலகத்தில் அன்று கிராமசபைக் கூட்டம். வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பைக் கேட்ட ராமமூர்த்தி, தம் கடையைப் பூட்டிவிட்டுக் கூட்டத்திற்குச் சென்றார். ஊராட்சி மன்ற தலைவர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வேற்றுப் பேசினார். சிறு தொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்துப் பேசினார். இத்திட்டத்தின்கீழ் யார் யாருக்கெல்லாம் உதவித்தொகை வந்திருக்கிறதோ அவர்களின் பெயர்களைப் படித்தார். ராமமூர்த்தி தம்முடைய பெயர் வருகிறதா என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், கடைசி வரை அவர் பெயர் வரவேயில்லை. ராமமூர்த்தி, தலைவரிடம் சென்றார். “ஐயா! எனக்கு ஏன் உதவித்தொகை இல்லை? நானும் ஒரு ஏழை தான். ஒரு வேளை சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்படுகிறேன…..“ என்று கேட்டார். “யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் மூலம் பண உதவி வேண்டுமோ, அவர்களுக்கான கூட்டம் பற்றி உங்களுக்கு தபால் மூலம் கூறி இருந்தோமே.! நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?“ என்றார் ...
Comments
Post a Comment