Current affairs - November

1. நிலம் மற்றும் சொத்து பதிவுகளுக்காக 'தரணி' என்ற இணையதளத்தை எந்த மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்?
விடை: தெலுங்கானா மாநிலம் முதல்வர் சந்திரசேகர ராவ்.

2. எந்த மாநிலத்தில் முதன் முதலில் நீர்வழி விமானசவை தொடங்கப்பட்டது? 
விடை: குஜராத் மாநிலம் கேவாடியாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

3. மத்திய நிதித்துறை செயலராக இருப்பவர் யார்?
விடை: அஜய் பூஷன் பாண்டே

4. உலகிலேயே அதிக அளவு நெகிழி கழிவுகளை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் எந்த நாடு முன்னணியில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறியுள்ளது? 
விடை: அமெரிக்கா

5. மேற்கத்திய படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகனாக நடித்த நடிகர் யார்?
விடை: சீன் கானரி

6. சமீபத்தில் தலைமை தகவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர் யார்?
விடை: யஷ் வர்தன் குமார் சின்ஹா

7. பிரம்மோஸ் ஏவுகணை எந்த நாட்டில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது?
விடை: இந்தியா

8. பெண் விஞ்ஞானிகளுக்கு உதவி செய்ய SERB-POWER திட்டத்தை துவக்கி வைத்தவர் யார்?
விடை: ஹர்ஷவர்தன்
குறிப்புகள்
SERB-POWER  Science and Engineering Research Board - Promoting Opportunities For Women in Exploratory Research.

9. மாசு புகார்களை நிவர்த்தி செய்ய 'பசுமை டெல்லி' செயலியை அறிமுகப்படுத்தியது யார்?
விடை: அரவிந்த் கெஜ்ரிவால்

10. இந்தியாவின் முதல் சூரிய சக்தி யில் இயங்கும் மினியேச்சர் ரயில் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
விடை: கேரளாவில் உள்ள வேலி என்னும் கிராமத்தில் முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

ca

1.  பன்னாட்டுக் கதிரியல் தினம் (International day of Radiology) என்று கொண்டாடப்படுகிறது?
விடை: November 8

2. பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
விடை: ரஷ்யாவைச் சேர்ந்த டேனியல் மெத்வதேவ்.

3. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலம் எது?
விடை: தமிழ்நாடு.

4. பசுமையை நோக்கிச் செல்லுங்கள் ( Go electric campaign) என்ற பிரச்சாரமானது எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
விடை: ஆந்திர பிரதேசம்

5. ONGC விதேஷ் லிமிடெட் (ovl) வின் புதிய நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: ஏ.கே. குப்தா

6. உலக சுனாமி விழிப்புணர்வு தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
விடை: நவம்பர் 5

7. ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளேயில் குறைந்த ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர் யார்?
விடை: ராஜஸ்தான் ராயல்ஸ் ஆர்ச்சர்.

8. சமீபத்தில் நேபாள ராணுவத்தின் கௌரவ பதவி யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: இந்திய ராணுவ தலைமை தளபதி எம். எம். நரவநேவ்.

9. மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை எந்த மாநிலத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது?
விடை: ஒடிசாவில் உள்ள சண்டிப்பூர்.

10. டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆயிரம் வெற்றிகளைப் பெற்ற 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளவர் யார்?
விடை: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால்

11. சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு தினம் என்று கடை பிடிக்கப்படுகிறது?
விடை: நவம்பர் 7

12. கொரோனா தடுப்பு மருந்துக்காக இந்தியா எந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
விடை: வங்காளதேசம்

13. 'மிஷன் சாகர்-2' திட்டத்தின் கீழ் எந்த நாட்டின் கடற்படை கப்பல் அயிராவாட் துறைமுகத்துக்கு வந்தது?
விடை: அமெரிக்கா

14. சமீபத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை எந்த மாநில முதல்வர் தொடங்கினார்?
விடை: கேரள முதல்வர் பினராயி விஜயன்

15. சமீபத்தில் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்தியர்கள் யார்?
விடை: அமித் பங்கள் மற்றும் சஞ்சித்

CA

1. தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக இருப்பவர் யார்?
விடை: க. பாண்டியராஜன்

2. அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றவர் யார்?
விடை: ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன்.

3. நியூசிலாந்தின் முதல் இந்திய வம்சாவழி அமைச்சராக பொறுப்பேற்றவர் யார்?
விடை: பிரியங்காா ராதாகிருஷ்ணன்.

4. சர்வதேசத் கதிரியக்கவியல் நாள் என்று கடைபிடிக்கப்படுகிறது?
விடை: நவம்பர் 8

5. இந்தியாவின் முதல் சூரிய சக்தியின் அடிப்படையை கொண்டு ஒருங்கிணைந்த கூட்டுு குடிநீர் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
விடை: அருணாச்சல பிரதேசம்

6. இந்தியாவின் மிக நீளமான ஓரடுக்கு மோட்டார்பில் சஸ்பென்ஷன் மேம்பாலம் எங்கு திறக்கப்பட்டது?
விடை: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது.

7. இந்தியாவின் வெளியுறவு செயலாளராக இருப்பவர் யார்?
விடை: ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்களா

8. சமீபத்தில் எந்த மாநில முதலமைச்சர் சேச்சா சமதான் மற்றும் விவசாயிகளுக்காக ஆன்லைன் சேவையைத் தொடங்கியுள்ளார்?
விடை: மத்திய பிரதேசம்

9. சமீபத்தில் இஸ்ரோ வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட பிஎஸ்எல்வி- c49 ராக்கெட்டில் எத்தனை செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டன?
விடை: 10

10. ஐரோப்பிய கிராண்ட் பிரிக்ஸ் மோட்டோ ஜிபி பந்தயத்தில் வெற்றி பெற்றவர் யார்?
விடை: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜோன் மிர் 

11. பொலிவியாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
விடை: லூயிஸ் ஆர்ச்சி.

12. பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா எந்த நாட்டை நீக்கியுள்ளது?
விடை: சூடான்.

13. தேசிய கல்வி தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: நவம்பர் 11

14. நதிநீர் புனரமைப்பு மற்றும் நீர் மேலாண்மையில் சிறந்து மேற்கொண்டதற்கு மத்திய அரசு தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திற்கு விருது வழங்கப்பட்டது?
விடை: வேலூர்.

CA


1. சேஷா சமதன் என்ற மொபைல் செயலியை எந்த மாநில முதல்வர் அறிமுகப்படுத்தினார்?
விடை: ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.
குறிப்புகள்:
  விவசாயிகள் காணும் பயிர், பாசன பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு செல்லாமல் சேச்சா சமதன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2. 'திட்ட காற்று பராமரிப்பு' என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
விடை: ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்.
குறிப்புகள்:
   குர்கானில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

3. சர்வதேச குழந்தைகள் அமைதிப் பரிசு 2020 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: பங்களாதேசை சேர்ந்த சதாத் ரகுமான்.

4. ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் வெற்றி பெற்றவர் யார்?
விடை: பிரிட்டன் வீரர் ஹமில்டன் ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

5. சர்வதேச மாணவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: நவம்பர் 17

6. சோபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
விடை: இத்தாலியைச் சேர்ந்த ஜெண்ணிக் சின்னர்

7. க்ரூ ட்ராகன் வின்கலம் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது?
விடை: SpaceX

8. ரிசர்வ் வங்கி இன்னோவேஷன் மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

9. சமீபத்தில் பசுமை எரிசக்தி திட்டம் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை: கோவா

10. பெருவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவிருக்கிறவர் யார்?
விடை: பிரான்சிஸ்கோ சகாஸ்டி

11. சர்வதேச ஆண்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: நவம்பர் 19

12. கிபி 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால சோழர்கால நடுகள் சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
விடை: திருப்பத்தூர்

13. பிகார் சட்டப்பேரவையின் இடைக்கால தலைவராக பதவி ஏற்றுள்ளவர் யார்?
விடை: ஜிதன்ராம் மாஞ்சி

14.  உலக மீன்வள தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: நவம்பர் 21

15. கர்நாடக மாநிலத்தின் 31வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் எது?
விடை: விஜயநகர.

Current affairs for TNPSC Group examsCA

1. நாட்டிலேயே முதல் முறையாக அட்டை இல்லாத சமப்படுத்தப்பட்ட மாதாந்திரத் தவணை (Cardless EMI Facility) வசதியை எந்த வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது?
விடை: ICICI Bank.

2. எந்த மாநில அரசு வத்ஸலா மற்றும் சமர்த் யோஜனா வை தொடங்கியுள்ளது?
விடை: ராஜஸ்தான்.

3. ஜீவன் தாரா என்னும் நடமாடும் மருத்துவ பிரிவை எந்த மாநில அரசு தொடங்கி வைத்துள்ளது?
விடை: இமாச்சலப் பிரதேசம்.

4. மகா ஆவாஸ் யோஜனா திட்டத்தை எந்த மாநிலம் துவங்கியுள்ளது?
விடை: மகாராஷ்டிரா.

5. வெள்ளி கிரக ஆராய்ச்சிக்கு இஸ்ரோ அனுப்பப்பட உள்ள செயற்கை கோளின் பெயர் என்ன?
விடை: சுக்ரயான்.

6. பீகார் சட்டசபை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
விடை: விஜய் சிம்ஹா.

7. உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் எந்த நகரம் முதலிடம் பிடித்துள்ளது?
விடை: பாகிஸ்தானில் உள்ள லாகூர்.

8. ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
விடை: ரஷ்ய வீரர் மெத்வதேவ்.

9. சமூகவலைத்தள குற்றங்களுக்கு எதிராக அவசர சட்டத்திற்கு எந்த மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்?
விடை: கேரளா.

10. மத்திய வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருப்பவர் யார்?
விடை: நரேந்திர சிங் தோமர்.

11. நாட்டிலேயே முதல்முறையாக பசு பாதுகாப்புக்கென்று எந்த மாநிலத்தில் அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது?
விடை: மத்திய பிரதேசம்.

12. ஹர் கார் நல் யோஜனா என்ற திட்டமானது எந்த மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ளது?
விடை: உத்தர பிரதேசம்.

13. ஹர் கார் லக்ஷ்மி என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை எந்த மாநில காவல்துறையினர் துவங்கி வைத்தனர்?
விடை: ஹரியானா.

14. புவி வெப்பமடைவதை எதிர்ப்பு எந்த நாடு பருவகால அவசர நிலையை அறிவித்துள்ளது?
விடை: ஜப்பான்.

15. SITMEX-20 கடற்படை பயிற்சி எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
விடை: இந்தியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர்.

Current affairs for TNPSC EXAM Preparation
CA

1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை வளர்க்க இந்தியா எந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
விடை: பின்லாந்து.

2. உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது?
விடை: 6வது இடத்தில் உள்ளது.

3. இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் எந்த மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது என்று இந்தியா டுடே கூறியுள்ளது?
விடை: தமிழ்நாடு.

4. ஆசியாவில் லஞ்சம் அதிகமாக காணப்படும் நாடுகளில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது?
விடை: இந்தியா.

5. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: நியூசிலாந்தை சேர்ந்த கிரெக் பார்க்லே.

6. அபயம் என்ற மொபைல் செயலியை எந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது?
விடை: ஆந்திரப் பிரதேசம்.
குறிப்பு: டாக்சி மற்றும் ஆட்டோவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் பொது ஏதேனும் அவசர சூழல் ஏற்பட்டால் அலாரம் எழுப்புகிறது.

7. கர்நாடக மாநிலத்தில் மாற்றம் செய்யப்பட்ட ஹாவேரி ரயில் நிலையத்தின் புதிய பெயர் என்ன?
விடை: மகாதேவப்பா மைலரா ரயில் நிலையம்.

8. டெல்லியில் நடமாடும் RT-PCR பரிசோதனை மையத்தை துவக்கி வைத்தவர் யார்?
விடை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

9. அண்மையில் எந்த மாநிலத்தில் சட்டவிரோத மத மாற்றதை தடை செய்வதற்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது?
விடை: உத்திரப் பிரதேசம்.

10. ஒவ்வொரு ஆண்டும் தேசிய பால் தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
விடை: நவம்பர் 26


11. 48வது சர்வதேச எம்மிஸில் 'சிறந்த நாடகத் தொடர்' விருதை வென்ற இந்திய தொடர் எது?
விடை: Delhi Crime.

12. ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவின்  எந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது ?
விடை: ஜல்லிக்கட்டு.

13. சமீபத்தில் எந்த நாடு ஹைபர்சோனிக் Tsirkon ஏவுகணையை சோதனை செய்துள்ளது?
விடை: ரஷ்யா.

Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil