TNPSC Current affairs - December 2020 1/12 - 3/12

Current affairs for TNPSC EXAM Preparation - December 2020 (1/12/2020 - 3/12/2020)

International Current affairs / World current affairs


1. உலக அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது?
விடை: மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த ரஞ்சித்சிங் திசாலே.

2. பாட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: இந்தியாவைச் சேர்ந்த சந்திப் கட்டாரியா.

3.  இளம் திறமைகளை கௌரவிக்கும் பாஃ ப்தா (BAFTA) தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: ஏ ஆர் ரகுமான்.
குறிப்புகள்:
BAFTA : BRITISH ACADEMY OF FILM AND TELEVISION ARTS.

4. சமீபத்தில் எந்த நிறுவனத்திற்கு அமெரிக்காவிலுள்ள உலக பாதுகாப்பு அமைப்பு விருது வழங்கியது?
விடை: இந்தியாவில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.

National current affairs


1. மக்களவை தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: உப்தல் குமார் சிங்.

2. சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: அமிதாப் ஜெயின்.

3. சமீபத்தில் எந்த வங்கி "SMS PAY" என்ற செயல்பாட்டை அறிமுகப்படுத்தியது?
விடை: YES BANK.

4. நாட்டின் சிறந்த போலீஸ் நிலையங்களில் எந்த காவல்நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது?
விடை: நாக்போக் சேக்மாய் காவல்நிலையம்( மணிப்பூர்)
குறிப்புகள்
இரண்டாமிடம்: சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம்.

 State current affairs


1. இ - சஞ்சீவனி தொலை தூர மருத்துவ சேவையில் எந்த மாநிலம் முன்னிலை வகிக்கிறது?
விடை: தமிழ்நாடு.

2. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளை அணுகுவதற்கு "தீ" என்ற மொபைல் செயலி எந்த மாநில அரசு துவங்கியுள்ளது?
விடை: தமிழ்நாடு.

Important days


1.  இந்திய கடற்படை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: டிசம்பர் 4.

2. உலக AIDS தினம் ஆண்டுதோறும் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
விடை: டிசம்பர் 1.

3. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
விடை: டிசம்பர் 3.

Sports current affairs


1. பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் 2020 போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
விடை: லூயிஸ் ஹமில்டன்.




Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil