TNPSC Current Affairs in Tamil - December 11 to 21 2020

Current affairs for TNPSC exams

Date : 11/12/2020 - 21/12/2020


International Current affairs / World current affairs

1. 2020 ஆம் ஆண்டில் உலகில் கார்பன்-டை-ஆக்சைடு வெளிப்பாடு எவ்வளவு விழுக்காடு குறைந்துள்ளதாக குளோபல் கார்பன் ப்ராஜெக்ட் அமைப்பு தெரிவித்துள்ளது?
விடை: 7%

2. 2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு எந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: ஐநாவின் உலக உணவு திட்டம்.

3. வெள்ளை மாளிகையின் பத்திரிக்கைதொடர்புத்தறை உதவிசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: இந்திய வம்சாவழியைச் சேர்ந்த வேதாந்த் பட்டேல்.

4. மனித வளர்ச்சி குறியீடு 2020 அறிக்கைப்படி எந்த நாடு முதலிடத்தை பிடித்துள்ளது?
விடை: நார்வே.
குறிப்புகள்
✓ இரண்டாமிடம் - அயர்லாந்து
✓ மூன்றாமிடம் - சுவிட்சர்லாந்து
✓ இந்தியா - 131 வது இடம்.

National current affairs

 1. டாக் பே என்ற செயலி எந்த வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
விடை: இந்தியா போஸ்ட் பைமெண்ட் பங்க்.

2. இந்தியாவில் கசடு மேலாண்மை கட்டமைப்பை மேம்படுத்த, சி கங்கா அமைப்புடன் எந்த நாடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
விடை: நார்வே.

3. அரசு அலுவலங்களில் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிய எந்த மாநில அரசு தடை விதித்துள்ளது?
விடை: மகாராஷ்டிரா.

4. சமீபத்தில் பிளாஸ்மோடியம் ஒவல் என்ற புதிய வகை மலேரியா எந்த மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது?
விடை: கேரளா.

5. சமீபத்தில் இ கோர்ட் சேவைகள் திட்டத்திற்கு எந்த விருது வழங்கப்பட்டுள்ளது?
விடை: டிஜிட்டல் இந்தியா விருது.

6. ஃபேர்வர்க் இந்தியா தரவரிசை பட்டியலில் டிஜிட்டல் தளத்தில் மிக மோசமாக செயல்படும் நிறுவனமாக எந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது?
விடை: ZOMATO.

7. பிரித்வி-2 ஏவுகணை எந்த மாநிலத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது?
விடை: ஒடிசா.

8. பிராந்திய காலநிலை மையம் இந்தியாவில் எங்கு நிறுவப்பட உள்ளது?
விடை: இமயமலை.

9. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்த இந்தியா எந்த திட்டத்தை தொடங்கியுள்ளது?
விடை: பிராண்ட் இந்தியா மிஷன்.

10. 2020 ஆம் ஆண்டிற்கான சமூக தொழில் முனைவோர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: அஷ்ரப் பட்டெல்.

11. VISVAS திட்டம் எந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ளது?
விடை: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறைைை அமைச்சகம்.

State current affairs 

1. 2,400 கோடி முதலீட்டில் முதல் தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் எந்த நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
விடை: OLA.

2. தென் மண்டல தீயணைப்பு துறையின் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: எஸ் விஜயகுமார்.

3. பாலகுமாரன் இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
விடை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கலாப்ரியா.

4. மதுரை உலக தமிழ் சங்க இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர் யார்?
விடை: தா. லலிதா.

5. "அம்மா சிறு மருத்துவமனை திட்டம்" எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
விடை: தமிழ்நாடு.

Important days

1. இந்திய எரிபொருள் சேமிப்பு தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: டிசம்பர் 14.

2. சர்வதேச இடம் பெயர்வோர் தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
விடை: டிசம்பர் 18.

Sports current affairs

1. IDF மகளிர் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றவர்கள் யார்?
விடை: இந்தியாவின் அங்கிதா ரெய்னா மற்றும் ஜார்ஜியாவின் இகாடெரின் கோர்கோட்சி. 

2. உலக கோப்பை மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?
விடை: அனுுஷ மாலிக்.

3. சமீபத்தில் எந்த பயிற்சிகளுக்கு விளையாட்டு போட்டி அந்தஸ்து மத்திய அரசு அறிவித்துள்ளது?
விடை: யோகா.

Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil