Alice in Wonderland story in Tamil || Tamil bedtime Stories
Alice's Adventures in Wonderland Story in Tamil for kids
Down the Rabbit Hole
அது ஒரு கோடை காலம். ஆலிஸ்சும் அவள் சகோதரியும் ஒரு ஆற்றங்கரை ஓரம் உட்கார்ந்திருந்தனர். ஆலிஸின் சகோதரி புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்த ஆலிஸ்க்கு சலிப்பு ஏற்பட்டது.
அப்போது திடீரென்று இளஞ்சிவப்பு கண்களையுடைய ஒரு வெள்ளை முயல் விரைந்து வருவதை பார்த்தாள்.
அந்த வெள்ளை முயல் நீல நிற கோட் அணிந்திருந்தது. தன்னுடைய கோட் பாக்கெட்டில் இருந்து பெரிய கைக்கடிகாரத்தை எடுத்து "ஓ அன்பே! நான் மிகவும் தாமதமாகி விட்டேன்!"
என்று கூறி மிகவும் வேகமாக ஓடியது.
அந்த முயல் பேசுவதைக் கண்ட ஆலிஸ், ஆச்சரியப்பட்டாள். உடனே அந்த முயலை பின் தொடர்ந்தாள் ஆலிஸ்.
அந்த முயல் திடீரென்று ஒரு பெரிய குழியில் கீழே விழுந்தது. அதனைக் கண்ட ஆலிஸ் அந்த குழியில் குதித்தாள். " நான் இப்போது எங்கு இருக்கிறேன்? ஒருவேளை பூமியின் மறுபக்கத்திற்கு செல்கிறேனோ?" என்றாள் ஆலிஸ்.
ஒருவழியாக ஆலிஸ் இலைகளின் குவியலின் மேல் விழுந்தாள். அவள் அந்த இடத்தை அங்குமிங்கும் பார்த்தாள். அப்போது மறுபடியும் அந்த முயலை கண்டாள் ஆலிஸ். அந்த முயல் முணுமுணுத்து கொண்டே அங்கிருந்து வேகமாக ஓடியது. மறுபடியும் அந்த முயலை பின்தொடர்ந்தாள் ஆலிஸ்.
ஆலிஸ் இரண்டு பக்கமும் சூழ்ந்துள்ள கதவுகளால் ஆன நீண்ட நடைபாதையை நெருங்கினாள். இந்த கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன. அங்கிருந்த கண்ணாடி மேசையில் ஒரு தங்க சாவி இருப்பதை அலிஸ் பார்த்தாள். அந்த சாவியை வைத்து கதவைத் திறக்க முயல்கிறாள், ஆனால் முடியவில்லை. பிறகு ஆலிஸ் ஒரு திரைக்கு பின்னால் ஒரு சிறிய கதவு இருப்பதை காண்கிறாள். அந்தக் கதவு மிகவும் சிறியதாக இருந்தது. அதனைத் திறந்து பார்க்கும் போது ஒரு அழகான பூக்கள் நிறைந்த தோட்டம் இருந்தது.
ஆலிஸ் உள்ளே செல்வதற்கு அந்த கதவு மிகவும் சிறியதாக இருந்ததால், அவளுக்கு உதவும் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்க அந்த அறையில் நோட்டம் விடுகிறாள். அப்போது"என்னை குடி" என்று குறிக்கப்பட்ட ஒரு பாட்டில் மேசையில் இருந்தது. அதனை குடித்த உடன் ஆலிஸ் உயரம் குறைந்து சுருங்கினாள். அவள் இப்போது கதவு வழியாக செல்ல முடியும் என்றாலும், அவள் சாவியை மேசையின் மேல் வைத்துவிட்டு சென்றதை உணர்கிறாள்.
அவள் அழத் தொடங்கினாள், அப்போது மேசைக்கு அடியில் ஒரு சிறிய கண்ணாடிபெட்டியில் 'என்னை சாப்பிடுங்கள்' என்ற வார்த்தைகள் குறிக்கப்பட்ட ஒரு சிறிய கேக் இருந்தது. இந்த கேக் அவளை வளர அல்லது சுருங்கவைக்கும் என்ற நம்பிக்கையுடன், அவள் அதை சாப்பிடுகிறாள்.ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று ஏமாற்றம் அடைந்தாள்.
Chapter 2 - The pool of tears
அதுமட்டுமல்லாமல் அவளுடைய தலை மேற்கூரையில் இடித்தது.
ஆலிஸ் அந்த முயலிடம் தனக்கு உதவுமாறு கேட்கிறாள். ஆனால் அந்த முயலோ தான் கையில் அணிந்திருந்த கையுறைகள் மற்றும் விசிறியை கீழே போட்டுவிட்டு வேகமாக முணுமுணுத்துக் கொண்டே ஓடியது. ஆலிஸ் அந்த முயலின் மீது கோபம் கொண்டாள்.
அந்த குளத்தில் ஆலிஸ் ஒரு எலியை பார்க்கிறாள். அவள் அந்த எலியிடம் உரையாட முயற்சிக்கிறாள். அவள் பூனை டைனா, மற்றும் நாய்களை பற்றிப் பேசியதால் அந்த எலி கோபப்பட்டு அங்கிருந்து நீந்திச் சென்றது. மேலும் பூனைகள் மற்றும் நாய்கள் பற்றி விவாதிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தால் நான் உனக்கு உதவுகிறேன் என்று அந்த எலி ஆலிஸ்க்கு நிபந்தனை விடுத்தது. ஆலிஸ் அந்த நிபந்தனையை ஏற்றாள். ஆலிஸ் மற்றும் அந்த எலியும் கரையை திரும்பினர்.
A Caucus race
ஆலிஸும் மற்ற உயிரினங்களும் அங்கிருந்து நீந்தி கரைக்கு வந்தனர். அவர்கள் ஈரமாக இருந்ததால் அதனை எப்படி உலர வைப்பது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எலி தனக்கு தெரிந்த வில்லியம் தி கான்குரர் (William the conqueror) என்பவரின் வரலாற்றுக் கதையை சொல்லி அனைவரையும் சலிப்படைய செய்தது. கதையை சொல்லி முடித்த பிறகும் ஆலிஸும் மற்ற விலங்குகளும் ஈரமாகவே இருந்தன.
டோடோ, ஒரு காக்கஸ் பந்தயம் வைக்கலாம் என்று பரிந்துரைத்தது.
ஆலிஸும் மற்ற விலங்குகளும் வட்டமாக நின்று போட்டியில் ஓட தொடங்கினர். போட்டி ஆரம்பித்த அரைமணி நேரத்திற்கு பிறகு அனைவரும் உலர்ந்தனர். டோடோ, அனைவரையும் இந்த போட்டியின் வெற்றியாளர்கள் என்று அறிவித்தது.
வெற்றியாளர்களுக்கு பரிசு கொடுக்கும் பொறுப்பை டோடோ ஆலிஸுக்கு வழங்கியது.
ஆலிஸ் தன்னிடமிருந்த மிட்டாய்களை அனைவருக்கும் வழங்கினாள். அப்போது மற்ற விலங்குகள் ஆலிஸுக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். டோடோ ஆலிஸுக்கு ஒரு விரல்சிமிழை பரிசளித்தது. எல்லா விலங்குகளும் இனிப்புகளை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
The Rabbit sends in a little Bill
வெள்ளை முயல் ஆலிஸ் இருக்கும் இடத்திற்கு விரைந்தது. தான் விட்டுச் சென்ற விசிறி மற்றும் கையுறைகளை தேடியது. வெள்ளை முயல் தனது வீட்டிற்குச் சென்று தன்னுடைய பொருட்களை எடுத்து வருமாறு அலிஸிடம் கட்டளையிட்டது. ஆலிஸும் முயல் காட்டிய வீட்டிற்குச் சென்றாள்.
அந்த வீட்டில் ஒரு மேஜையில் விசிறி, கையுறைகள் மற்றும் ஒரு சிறிய பாட்டில் இருப்பதை காண்கிறாள்.
அந்த பாட்டிலை பார்த்தவுடன் ஆலிஸ் அதனை ஆர்வத்துடன் குடித்தாள். அதனை குடித்து முடித்த உடனேயே அவள் வேகமாக வளரத் தொடங்கினாள். அவளுடைய உருவம் பெரியதாகியதால் அந்த வீட்டைவிட்டு அவளால் வெளியே வர இயலவில்லை. அவள் அந்த அறைக்குள் மாட்டிக் கொண்டாள்.
முயல் ஆலிஸுக்காக காத்துக்கொண்டிருந்தது. வெகு நேரம் ஆகியும் ஆலிஸ் வராததால் முயல் அந்த வீட்டிற்கு சென்றது. கதவை திறக்க முயன்றது. ஆனால் ஆலிஸின் ராட்சத கை கதவை திறக்க தடுக்கிறது. முயலும் மற்ற விலங்குகளும் ஒன்றாகக் கூடி ஒரு திட்டத்தை தீட்டின. அந்த கூட்டத்தில் இருந்த விலங்குகளில் மிகச் சிறிய விலங்கான "பில்" என்னும் பல்லியை வீட்டின் புகைபோக்கி வழியாக கீழே இறக்க முயற்சித்தனர். ஆனால் ஆலிஸின் ராட்சத கால் அந்த பல்லியை எட்டி உதைத்து வெளியே சென்று விழச் செய்தது.
பிறகு முயல் வேறு ஒரு திட்டத்தை வகுத்தது. கீழே இருக்கும் கூழாங்கற்களை வீட்டின் ஜன்னல் வழியாக அனைத்து விலங்குகளும் வீசத் தொடங்கினர். அந்த கூழாங்கற்கள் கேக்காக மாறியது. இந்த கேக்குகள் என் உருவத்தை நிச்சயம் மாற்றும் என்று எண்ணி ஆலிஸ் நம்பிக்கையுடன் அந்த கேக்குகளை சாப்பிட்டாள். அதனை சாப்பிட்டு முடித்த பிறகு மறுபடியும் ஆலிஸ் உயரம் குறைந்து சுருங்கினாள். உடனடியாக அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.
Advice from a Caterpillar
ஆலிஸ் அந்த வீட்டை விட்டு தப்பித்து காட்டிற்குள் வந்தாள். அங்கு ஒரு பெரிய கம்பளிப்பூச்சி காளான் மேல் அமர்ந்துகொண்டு ஹுக்காஹ் புகை பிடித்துக் கொண்டிருந்தது. ஆலிஸ் அந்த கம்பளிப்பூச்சியை உற்று கவனிக்கிறாள். அந்தக் கம்பளிப்பூச்சி ஆலிஸை பார்த்து "நீ யார்?" என்று கேட்டது. ஆலிஸ் தான் யார் என்பதைப்பற்றி புரிய வைக்க சிரமப்பட்டு, அங்கிருந்து விரக்தியுடன் வெளியே செல்ல முயற்சிக்கிறாள். ஆனால் அந்த கம்பளிப்பூச்சி அவளை அழைத்து ஒரு கவிதையை பாட சொல்கிறது.
அதற்கு அந்தக் கம்பளிப்பூச்சி, ஒரு காளானை கொடுத்து, "இந்த காளானின் ஒரு பக்கம் உன்னை உயரமாக வளர செய்யும்; மறுபக்கம் சாப்பிடும்போது உன்னை சிறியதாக்கிவிடும்" என்று ஆலிஸிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றது.
ஆலிஸ் காளானின் ஒரு பக்கத்தை சாப்பிட்ட பிறகு உயரம் குறைந்து சுருங்கினாள். பிறகு, காளானின் மறுபக்கத்தை சாப்பிட்டாள். அப்போது அவளது கழுத்து ஒட்டகச்சிவிங்கி போல நீளமாக வளர்ந்தது. அப்போது அங்கிருந்த ஒரு புறா ஆலிஸை பாம்பு என்று நினைத்து தாக்க முயன்றது. ஆலிஸ், தான் ஒரு பாம்பு அல்ல என்று உறுதி அளக்கிறாள். அதன்பின்பு அந்தப் புறா அதன் கூட்டிற்கு சென்றது. ஆலிஸ் தனது சரியான உயரம் வரும்வரை காளானின் வலது பக்கமும் இடது பக்கமும் மாற்றி மாற்றி சாப்பிட்டாள்.
ஒருவழியாக அவள் சரியான உயரம் அடைந்தாள். மீதமுள்ள காளானை பின்பு உதவும் என்று கருதி, அவள் பத்திரமாக வைத்துக்கொண்டாள். அவள் அந்த காட்டை விட்டு ஓடினாள். |
Pig and the Pepper
காட்டிலிருந்து நடந்து வரும்போது ஆலிஸ் ஒரு வீட்டை பார்க்கிறாள். அங்கு ஒரு மீன் சேவகன் போல உடை அணிந்து அந்த வீட்டின் கதவை தட்டியது. அந்தக் கதவை பணியாளர் போல உடை அணிந்த ஒரு தவளை அந்தக் கதவை திறந்தது. ராணியுடன் குரோக்கெட் விளையாட டச்சசை அழைக்கும் கடிதத்தை அந்த மீன் சேவகன் தவளை சேவகனிடம் கொடுத்தது. மீன் சேவகன் அங்கிருந்து போனபின்பு, தவளை சேவகன் கீழே அமர்ந்து வானத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தது.
அங்கு டச்சஸ் குழந்தையை கவனித்துக் கொண்டிருப்பதையும், ஒரு சிரிக்கும் பூனை அடுப்பங்கரை யோரம் அமர்ந்திருப்பதையும், சமையற்காரி மிளகு தூக்கலாக ஒரு சூப் செய்து கொண்டிருப்பதையும் கவனித்தாள். அந்த சமையல்காரி மிளகு அதிகம் கொட்டுவதால் டச்சஸுக்கும் அந்தக் குழந்தைக்கும் தும்மல் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த சமையல்காரிக்கு மட்டும் தும்பல் வரவில்லை.
ஆலிஸ் " இந்தப் பூனை ஏன் சிரித்துக் கொண்டே இருக்கிறது? " என்று கேட்டாள். அதற்கு டச்சஸ் "இது ஒரு செஷையர் பூனை" என்று கூறினார். அப்போது திடீரென்று அந்த சமையல்காரி அங்கிருந்த பொருட்களை தூக்கி எறிந்து டச்சஸ் மற்றும் குழந்தையை தாக்கத் தொடங்கினாள். அப்போது டச்சஸ் தன் வைத்திருந்த குழந்தையை ஆலிஸ் இடம் தூக்கி எறிந்துவிட்டு ராணியுடன் குரோகெட் விளையாட சென்றுவிட்டாள்.
குறிப்பு:
குரோகெட் விளையாட்டு என்பது புல்வெளியில் விளையாடப்படும் மர பந்தாட்டம் ஆகும்.
A Mad Tea Party
The Climax
ஆலிஸ் அந்த அழகான பூந்தோட்டத்தில் நடந்து வருகிறாள். அப்போது 3 தோட்டக்காரர்களை சந்திக்கிறாள். அவர்கள் உயிருடன் இருக்கும் விளையாட்டு சீட்டுக்கட்டுகள் போல இருந்தர். அந்த தோட்டத்தில் இருக்கும் வெள்ளை ராஜாக்களின் மேல் சிவப்பு நிற சாயத்தை பூசிக் கொண்டு இருந்தனர். அவ்வாறு ஏன் செய்தார்கள் என்றால், இதயங்களின் ராணிக்கு வெள்ளை நிறம் பிடிக்காது. அதனால் அவர்கள் சிவப்பு நிற சாயத்தைப் பூசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது இதயங்களின் ராணி வீரர்கள் மற்றும் விருந்தினர்களுடன் அங்கு வந்தாள். அந்த வெள்ளை முயலும் வந்தது. அவர்கள் அனைவரும் குரோகெட் விளையாட தயார் செய்து கொண்டிருந்தனர். குரோகேட் விளையாட முள்ளம் பன்றிகளை பந்துகள் ஆகவும், ஃபிளமிங்கோ பறவைகளை பந்துகளை அடிக்கும் மட்டை ஆகவும், வீரர்களை வளையம் ஆகவும் பயன்படுத்தினர்.
விளையாடி முடித்தவுடன் அங்கிருந்து ராணி மற்றும் அவர் விருந்தாளிகள் கோட்டைக்கு திரும்பினர். அப்போது ராணி தனக்கு மிகவும் பிடித்த புளிப்பு மிட்டாய்களை சுவைக்க சமையலறைக்கு சென்று பார்த்தாள், ஆனால் அந்த புளிப்பு மிட்டாய்கள் அங்கு இல்லை. யாரோ திருடி விட்டார்கள். ராணி மிகவும் கோபமடைந்தார்.
" ஆலிஸ்! ஆலிஸ்! " என்று ஒரு குரல் கேட்டது. அது அவளது சகோதரியின் குரல். அப்போதுதான் தெரியவந்தது, அது ஒரு கனவு என்று. அவள் தனது கனவில் நடந்த விசித்திரமான சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறாள். ஆலிஸ்ஸும் அவள் சகோதரியும் வீடு திரும்பினார்.
Comments
Post a Comment