Current Affairs in Tamil - May 2021
Current Affairs in Tamil - May 2021
TNPSC CURRENT AFFAIRS 2021 IN TAMIL: "Penning in my way" provides you Current affairs in Tamil for TNPSC, TET, RRB, UPSC, Banking and other competitive exams. Here is the current affairs for May 2021 in Tamil covering the following topics: International, National and State current affairs, sports, important days, economic, etc.
Date : 1/5/2021 - 31/5/2021
1. சமீபத்தில் எந்த நிறுவனம் "மிஷன் பாரத் ஆக்சிஜன்" (Mission Bharath Oxygen) என்ற திட்டத்தைத் தொடங்கியது?
விடை: ஐஐடி கான்பூர்.
2. சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: மே 12.
3. அசாமின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர் யார்?
விடை: ஹிமந்தா பிஸ்வா சர்மா.
4. நியூயார்க் நகர சர்வதேச திரைப்பட விழாவில் குறும்பட பிரிவில் (Short film) சிறந்த நடிகருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது?
விடை: அனுபம் கேர்.
5. "பருவத் தாரா யோஜனா"என்ற திட்டத்தை எந்த மாநில அரசு அங்குள்ள நீர்நிலைகளை புதுப்பிக்கவும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது?
விடை: இமாச்சலப் பிரதேசம்.
6. உலகின் மிக நீளமான பாதசாரி தொங்குபாலம் ( Pedestrian suspension bridge) எந்த நாட்டில் கட்டப்பட்டுள்ளது?
விடை: போர்ச்சுகல்.
7. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீரர் யார்?
விடை: பிரணதி நாயக்.
8. இங்கிலாந்தில் நடைபெற்ற உலக ஸ்னூக்கர் (snooker) சாம்பியன்ஷிப் - 2021 போட்டியின் வெற்றியாளர் யார்?
விடை: மார்க் செல்பி.
9. உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய பளுதூக்குதல் போட்டியில் 45 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?
விடை: ஜில்லி தலபெஹெரா.
10. சர்வதேச தொழிலாளர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: மே 1.
11. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர் யார்?
விடை: திரு. மு. க. ஸ்டாலின்.
12. நேபாளத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: கே. பி. ஷர்மா ஓலி.
13. ' Merchant Stack' என்னும் சேவையை எந்த வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது?
விடை: ICICI வங்கி.
14. பீகார் மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
விடை: மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரிபுராரி சாரன்.
15. Axis வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: அமிதாப் சவுத்ரி.
16. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: கே. சத்யாகோபாலை.
17. புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக பேரவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: க. லக்ஷ்மிநாராயணன்.
18. ஆக்ஸிஜன் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக "Mission Oxygen Self relaince" என்ற திட்டத்தை எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?
விடை: மகாராஷ்டிரா.
19. CBI இன் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: சுபோத் குமார்.
20. Covid 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு உதவ "சஞ்சீவனி பரியோஜனா"என்ற திட்டத்தை எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?
விடை: ஹரியானா.
21. சமீபத்தில் எந்த நிறுவனம் தமிழ்நாட்டு மக்களுக்காக வாடகை டிராக்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது?
விடை: டஃபே நிறுவனம் (TAFE - டிரக்டர்ஸ் அண்ட் பார்ம் எக்யூப்மென்ட்)
21. உலகின் பணக்கார பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளவர் யார்?
விடை: பெர்னார்டு அர்னால்ட்.
22. விவசாயத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா எந்த நாட்டுடன் 3 ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
விடை: இஸ்ரேல்.
23. Covid19 கண்டறிய DIPCOVAN என்ற கருவியை எந்த நிறுவனம் தயாரித்துள்ளது?
விடை: DRDO - பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு.
24. சர்வதேச தைராய்டு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
விடை: மே 25.
25. உலகளாவிய G20 சுகாதார உச்சி மாநாடு எந்த நாட்டில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
விடை: இட்டாலி.
26. மருத்துவமனை படுக்கைகளை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய எந்த மாநிலம் " அம்ரித் வாகினி" என்ற மொபைல் செயலியை தொடங்கியுள்ளது?
விடை: ஜார்க்கண்ட்.
27. "ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர்" என்ற இடத்தை பிடித்துள்ளவர் யார்?
விடை: கௌதம் அதானி.
28. Covid-19 பெருந்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 -DG என்னும் மருந்தை எந்த அமைப்பு தயாரித்துள்ளது?
விடை: DRDO - பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு.
29. தமிழக சட்டசபையின் அவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர் யார்?
விடை: அப்பாவு.
30. சினோஃபார்ம் (Sinopharm) என்று தடுப்பூசி எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
விடை: சீனா.
31. எட்டியன் கிளிசிட்ச் விருது ( Etienne Glichitch Award ) எந்த விளையாட்டு அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: ஹாக்கி இந்தியா.
32. புத்த பூர்ணிமா ஆண்டுதோறும் என்று கொண்டாடப்படுகின்றது?
விடை: மே 26.
Nice post. Very useful for preparing exams.
ReplyDeleteTNPSC Current Affairs
tnpsc model question paper with answer
samacheer kalvi books
tnpsc group 1 exams
manidhaneyam ias academy