Current Affairs in Tamil - June 2021

Current Affairs in Tamil - June 2021

TNPSC CURRENT AFFAIRS 2021 IN TAMIL: "Kalvi Thuli" provides you Current affairs in Tamil for TNPSC, TET, RRB, UPSC, Banking and other competitive exams. Here is the current affairs for June 2021 in Tamil covering the following topics: International, National and State current affairs, sports, important days, economic, etc. 


1. டோக்கியோவில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்து வாள் வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் யார்?
விடை:  தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி.

2. துபாயில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றவர் யார்?
விடை: இந்தியாவை சேர்ந்த சஞ்சித் குமார்.
குறிப்பு
✓  வெள்ளி பதக்கம் வென்றவர்கள் - ஷிபா தபா மற்றும் அமித் பங்கால்.

3. சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: ஜூன் 21.

4. ஈரானின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
விடை: இப்ராஹிம் ரெய்சி.

5. இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனாவிற்கு வழங்கப்பட்ட பெயர் என்ன?
விடை: ஆல்ஃபா.
குறிப்பு
✓ இந்தியா - டெல்டா.

6. சர்வதேச அகதிகள் தினம் ஆண்டுதோறும் என்று கடைபடிக்கப்படுகிறது?
விடை: ஜூன் 20.

7. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: சத்ய நடெல்லா.

8. போலந்து ஓபன் மல்யுத்தப் போட்டியில் 53 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றவர் யார்?
விடை: இந்தியாவைச் சேர்ந்த வினேஷ் போகத்.

9. உலகளாவிய அமைதி குறியீடு 2021 அறிக்கைப்படி இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
விடை: 135 வது இடம். 

10. சர்வதேச சுற்றுலா தினம் ஆண்டுதோறும் என்று கொண்டாடப்படுகின்றது?
விடை: ஜூன் 18.

11. ஆஸ்திரேலியாவின் புதிய துணை பிரதமராக பொறுப்பேற்று கொண்டுள்ளவர் யார்?
விடை: பர்னாபி ஜாய்ஸ்.

12. ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்திய விமானப்படையில் போர் விமானியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் யார்?
விடை: மாவயா சுதன்.

13. தமிழகத்தில் காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு டிஜிஜியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: எஸ் லட்சுமி.

14. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: சஞ்சய் யாதவ்.

15. சர்வதேச பெற்றோர்கள் தினம் ஆண்டுதோறும் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: ஜூன் 1.

16. நாட்டிலேயே முதல்முறையாக எந்த கிராமத்தில் 100% covid 19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது?
விடை: பண்டிபொரா மாவட்டத்தில் உள்ள வெயான் கிராமம் (ஜம்மு - காஷ்மீர்).

17. அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் 2021 ஐ வென்றவர் யார்?
விடை: ரெட் புல்லின் செர்ஜியோ பெரெஸ்.

18. உலகளாவிய சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் என்று கடைபிடிக்கப்படுகிறது?
விடை: ஜூன் 5.

19. இந்திய கிரிக்கெட் வாரிய (BCCI ) தலைவராக பொறுப்பேற்று கொண்டுள்ளவர் யார்?
விடை: சௌரவ் கங்குலி.

20. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தால் (CSE) வெளியிடப்பட்ட "வாழ்க்கை எளிதாக்கும் குறியீடு 2020" (EASE OF LIVING - 2020) அறிக்கைப்படி எந்த நகரம் முதல் இடத்தை பிடித்துள்ளது?
விடை: பெங்களூரு.

21. ஒலிம்பிக்கில் போட்டியிடும் முதல் திருநங்கை தடகள வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் யார்?
விடை : நியூசிலாந்தைை சேர்ந்த லாாரல் ஹப்பார்டு.

22. பாரிசில் நடந்து வரும் உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர் யார்?
விடை: இந்தியாவைச் சேர்ந்த தீபிகா குமாரி.

23. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீரர் யார்?
விடை: சஜன் பிரகாஷ்.

24. இந்தியாவின் எந்த மாநிலம் ராபிஸ் நோய் இல்லாத முதல் மாநிலமாக திகழ்கிறது?
விடை: கோவா.

25. ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த அணி வென்றது?
விடை: நியூசிலாந்து.

26. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட "அக்னி பி ஏவுகணை" எங்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது?
விடை: ஒடிசா மாநிலத்திலுள்ள பாலாசூர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தளத்தில் "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு" நிறுவனத்தால் சோதிக்கப்பட்டது.

27. தமிழகத்தின் புதிய, "சட்டம் - ஒழுங்கு டிஜிபி"யாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளவர் யார்?
விடை: டிஜிபி சைலேந்திரபாபு.

28. சீனாவை சேர்ந்த ஹூரன் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த நூற்றாண்டில் ஏழை, எளிய மக்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்கியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்?  
விடை: டாடா நிறுவனத்தை தொடங்கியவரும், மறைந்த தொழிலதிபருமான ஜாம்சேட்ஜி டாடா.

29. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: பீட்டர் அல்போன்ஸ்.

30. ஐ.நா. வெளியிட்டுள்ள சர்வதேச பாதுகாப்பு குறியீடு அறிக்கையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
விடை: 10வது இடம்.

Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil