Snow White story for kids in Tamil
Tamil short stories for kids - Bedtime stories
Snow White story in Tamil
Snow white and the little dwarfs என்னும் கதை Jacob Grimm மற்றும் Wilhelm Grimm ஆல் எழுதப்பட்ட கதை ஆகும். The Snow White என்ற கதை ஒரு அழகான பெண்ணைப் பற்றிய ஒரு கதை ஆகும். அவள் தனது மாற்றாந்தாயின் (Step mother ) கோபம் மற்றும் பொறாமையை எப்படி எதிர்கொள்கிறாள் மற்றும் ஏழு குள்ள மனிதர்களால் எப்படி காப்பாற்றப்படுகிறார் என்பது கதை.
ஒரு அழகான அரண்மனையில் ஒரு ராஜாவும் ராணியும் வசித்து வந்தார்கள். அவர்கள் இருவருக்கும் ஒரு அழகான இளவரசி பிறந்தாள். அவள் பெயர் ஸ்னோ ஒயிட் (Snow White). அவள் மற்றவர்களிடம் மிகவும் அன்பாக பழகுவாள். அவள் பிறந்த சில நாட்களிலேயே அவள் தாய் இறந்துவிட்டார். அதனால் அவர் தந்தை வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். அவள் மிகவும் பொறாமை பிடித்தவள். அந்த ராணி ஒரு கொடூர அரக்கி ஆக மாறினாள்.
அந்த ராணி ஒரு மந்திர கண்ணாடியை வைத்திருந்தாள். தினமும் அந்த கண்ணாடியிடம்,
"அற்புத கண்ணாடியே! இந்த உலகிலேயே மிகவும் அழகானவள் யார்?" என்ற கேள்வியை அந்த ராணி கேட்பது வழக்கம். அந்த மந்திர கண்ணாடி, "உன்னை தவிர இந்த உலகில் வேறு யார் அழகாக இருக்க முடியும்!" என்று கூறியது. இதைக் கேட்ட அந்த ராணி மகிழ்ச்சி அடைந்தாள்.
நாட்கள் கடந்தது. சிறிய குழந்தையாக இருந்த ஸ்னோ வைட் வளர்ந்துவிட்டாள். ஒரு நாள் ராணி அந்த மந்திர கண்ணாடியிடம்,
"அற்புத கண்ணாடியே! இந்த உலகிலேயே மிகவும் அழகானவள் யார்?" என்ற கேள்வியை கேட்டாள். அதற்கு அந்த மந்திர கண்ணாடி, "கண்டிப்பாக நீ இல்லை! ஸ்னோ ஒயிட் தான் இந்த உலகிலேயே மிகவும் அழகானவள்." என்று கூறியது. இதைக் கேட்டதும் அந்த ராணி ஆவேசமாக கோபப்பட்டாள்.
உடனே ஒரு வேட்டைக்காரனை கூப்பிட்டு, "ஸ்நோ ஒயிட்டை கொன்றுவிடுங்கள்!" என்று ஆணையிட்டாள். அந்த வேட்டைக்காரன் ஸ்னோ ஒயிட்டை ஒரு காட்டிற்குள் அழைத்துச் சென்றான். ஸ்னோ வைட்டை கொலைசெய்ய கத்தியை எடுத்த போது, ஸ்னோ வைட் பயந்து அழுததால் அவள் மீது இரக்கப்பட்டு அவளை விட்டுவிட்டான். பிறகு ஸ்நோ வைட் அந்த காட்டிற்குள் நடந்து வரும்போது ஒரு வீட்டை பார்த்தாள்.
ஸ்நோ வைட் அந்த வீட்டின் உள்ளே சென்றாள். அந்த வீடு ஒரே அலங்கோலமாக இருந்தது. அதனால் அதனை துடைக்க தயாரானாள். துடைத்துக் கொண்டிருக்கும் போது அவள் நெருங்கிய நண்பன் நினைவில் வந்தான். ஸ்னோ வைட்இன் தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் முன், அவளும் பக்கத்து ராஜ்யத்தில் வாழ்ந்த ஒரு இளவரசரும் நண்பர்களாக பழகினர். இருவரும் தினமும் அரச தோட்டத்தில் விளையாடுவது வழக்கம். கோட்டைக்கு குடிபெயர்ந்த புதிய ராணி, வெளியாட்கள் இந்த கோட்டைக்குள் நுழைய கூடாது என்ற புதிய சட்டத்தை பிறப்பித்தாள். இதனால் அந்த இளவரசரர் இளவரசியை பார்க்க முடியவில்லை.
ஸ்னோ வைட் ஒரு வழியாக இந்த வீட்டை சுத்தப்படுத்தி முடித்துவிட்டாள். உணவு அருந்தும் மேசையில் ஏழு கிண்ணங்களில் சூப்பும் பழங்களும் இருந்தன. மேலும் அந்த மேசையை சுற்றி ஏழு நாற்காலிகள் இருந்தன. மேஜையில் இருந்த உணவு பொருட்களை சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு அறைக்குள் நுழைந்தாள். அந்த அறையில் ஏழு படுக்கைகள் இருந்தன. அவற்றுள் ஒரு படுக்கையின் மீது ஏறிப் படுத்துக் கொண்டு உறங்கினாள். அந்த வீடு ஏழு குள்ள மனிதர்களுக்கு சொந்தமான வீடாகும். அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழு குள்ள மனிதர்கள் வேலையை முடித்துவட்டு வீடு திரும்பினர். ஸ்னோ வைட் உறங்கி கொண்டிருப்பதை பார்த்தார்கள். ஸ்நோ ஒயிட் தனது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டாள். பிறகு அவர்களிடம் நடந்ததை கூறினாள். அந்த ஏழு குள்ள மனிதர்களும் ஸ்னோ வைட்டின் கதையை கேட்டு "நீ இங்கேயே தங்கி கொள்ளலாம். நாங்கள் உனக்கு பாதுகாப்பாக இருப்போம்! கவலைப்படாதே!" என்று அனுமதி வழங்கினர்.
ஒரு நாள் ராணி, ஸ்நோ ஒயிட் உயிருடன் இருப்பதை எப்படியோ அறிந்து கொண்டாள். அவளை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று எண்ணினாள். அந்தக் கொடிய ராணி ஒரு வயதான பாட்டியைப் போல வேடமணிந்து அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அங்கு சென்றாள். சுவைமிக்க ஆப்பிள்களில் விஷத்தை கலந்து ஒரு கூடையில் வைத்துக்கொண்டு அந்த வீட்டின் கதவை தட்டினாள். ஸ்னோ வைட் டுக்கு பரிசாக அந்த ஆப்பிள்களை கொடுத்தாள்.
ஸ்னோ வைட் ஒரு ஆப்பிளை எடுத்து கடித்த போது, மயங்கி விழுந்தாள். அந்த ஏழு குள்ள மனிதர்களும் வீடு திரும்பியபோது ஸ்னோ வைட் மயங்கி கிடப்பதை பார்த்தனர். ஸ்னோ வைட் மயங்கி இருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ராணியை அந்த இடத்தை விட்டு துரத்தினர். ஓட முடியாமல் அந்த ராணி மலை உச்சியில் இருந்து கீழே குதித்து இறந்தாள்.
ஆனால் ஸ்நோ ஒயிட் இன்னும் கண் விழிக்கவில்லை. இதனால் அந்த ஏழு குள்ள மனிதர்களுக்கு பரிதாபப்பட்டனர். அவளை ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்தனர். கண்ணாடி பெட்டியைச் சுற்றி மலர்களால் அலங்கரித்தனர்.
அப்போது ஸ்னோ வைட் இன் நண்பரான இளவரசர் அந்த இடத்திற்கு வந்தார். ஸ்நோ வைட்இன் நிலைமையை பார்த்து வருத்தப்பட்டான். ஸ்னோ வைட் உடன் பழகிய அந்த பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்தான். அவளுக்கு கடைசியாக ஒரு முத்தமிட்டான். உடனே ஸ்நோ வைட் கண் விழித்துக்கொண்டாள். உண்மையான அன்பின் முத்தத்தால் அவள் பெற்ற சாபம் விமோசனம் அடைந்தது. பிறகு ஸ்நோ ஒயிட்டும் அந்த இளவரசரும் அரண்மனைக்குச் சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
நீதி:
- நாம் யாரையும் பார்த்து பொறாமை படக்கூடாது. ஸ்னோ வைட் இன் மாற்றாந்தாய் (Step mother) ஸ்னோ வைட் இன் அழகைப்பார்த்து பொறாமைப்பட்டதால் அவள் (ராணி) அழிவுக்கு அவளே காரணம் ஆகி விட்டாள்.
- தோற்றத்தின் அழகை விட உள்ளத்தின் அழகே சிறந்தது.
- யாரையும் கண்மூடித்தனமாக நம்ப கூடாது.
Comments
Post a Comment