Current Affairs in Tamil for TNPSC Exam - July 2021
TNPSC CURRENT AFFAIRS 2021 IN TAMIL: "Kalvi Thuli" provides you Current affairs in Tamil for TNPSC, TET, RRB, UPSC, Banking and other competitive exams. Here is the current affairs for July 2021 in Tamil covering the following topics: International, National and State current affairs, sports, important days, economic, etc.
1. 'கார்கில் விஜய் திவாஸ்' ஆண்டுதோறும் என்று கடைபிடிக்கப்படுகின்றது?
விடை: ஜூலை 26.
2. "பல்லெகு பட்டாபிஷேகம்" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
விடை: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எலமஞ்சலி சிவாஜி.
3. சமீபத்தில் குரங்கு பி (Monkey B) வைரஸ் எந்த நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது?
விடை: சீனா.
4. கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர் யார்?
விடை: பசவராஜ் பொம்மை.
குறிப்பு: பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
5. சமீபத்தில் கிருஷ்ணதேவராயர் காலத்து செப்புப்பட்டயம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
விடை: திருப்பூரை அடுத்த அகரம் என்ற கிராமத்தில் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செப்புப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
6. சமீபத்தில் நோரோவைரஸ் எந்த நாட்டில் பரவி வருகின்றது?
விடை : இங்கிலாந்து.
குறிப்பு: Winter vomiting bug என்றும் அழைக்கப்படும்.
7. 'தகைசால் தமிழர்' என்ற விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது?
விடை: திரு என் சங்கரைய்யா.
குறிப்பு: தமிழ் நாட்டிற்கும் தமிழ் இனத்திற்கும் மாபெரும் பங்காற்றியவர்களை கௌரவிக்கும் விதமாக 'தகைசால் தமிழர்' என்ற விருதை வழங்கவுளளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
8. சர்வதேச புலிகள் தினம் ஆண்டுதோறும் என்று கடைபிடிக்கப்படுகின்றது?
விடை: ஜூலை 29.
9. தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளவர் யார்?
விடை: சைலேந்திரபாபு.
10. 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச இணைய பாதுகாப்பு குறியீடு (GCI - Global Cybersecurity Index) அறிக்கைப்படி இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
விடை: 10.
11. உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டுள்ளவர் யார்?
விடை: புஷ்கர் சிங் தாமி.
12. 2021ஆம் ஆண்டிற்கான ஃபுக்குவோக்கா விருது ( Fukuoka Asian Culture Prizes) யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: பத்திரிக்கையாளர் பாலகும்மி சாய்நாத்.
13. உலகளாவிய தொடக்க சுற்றுச்சூழல் குறியீடு - 2021 (Global startup ecosystem Index) அறிக்கைப்படி இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
விடை: 20
குறிப்பு: முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.
14. சமீபத்தில் எந்த நாடு பொருளாதார கூட்டுறவு வளர்ச்சி அமைப்பில் (OECD)/ G20 வரி ஒப்பந்த கட்டமைப்பில் இணைந்துள்ளது?
விடை: இந்தியா.
குறிப்பு: OECD - Organisation for Economic Co-operation and Development.
15. இந்தியாவின் முதல் தானிய ஏடிஎம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
விடை: ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம்.
16. அமேசான் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: ஆண்டி ஜெஸ்ஸி.
17. 2021 - ஆஸ்டிரியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
விடை: மேக்ஸ் வேர்ஸ்டப்பென்.
18. ஹரியானா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: பண்டாரு தத்தாத்திரேயா.
19. சர்வதேச செஸ் (Chess) தினம் ஆண்டுதோறும் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: ஜூலை 20 .
20. சமீபத்தில் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த படிக்கிணறு எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
விடை: ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலை.
Comments
Post a Comment