The Frog Prince || Tamil Bedtime stories

The Frog Prince story in Tamil

Tamil Fairy Tales for kids

  
The Frog Prince என்ற கதையை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிரிம் சகோதரர்கள் (Grimm Brothers ) எழுதியுள்ளனர். இந்த கதை ஒரு அருவெறுப்பான தவளை எப்படி அழகான இளவரசராக மாறினார் என்பதைப் பற்றியதாகும்.


ஒரு பெரிய அரண்மனையில் ஒரு அழகான இளவரசி வாழ்ந்து வந்தாள். அந்த அரண்மனையை சுற்றி பூச்செடிகளும் மரங்களும் மற்றும் ஒரு சிறிய குளமும் இருந்தது. அந்தத் தோட்டத்தில் இளவரசி தினமும் விளையாடுவது வழக்கம். ஒரு நாள் அந்த இளவரசி தனது தங்க பந்தைக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த போது அந்த தங்க பந்து  குளத்தில் தவறி விழுந்தது. அந்த இளவரசி தேம்பித் தேம்பி அழுதாள்.

அவள் அழுது கொண்டிருக்கும் சத்தத்தை கேட்ட ஒரு தவளை, "அழகான இளவரசியே! ஏன் அழுகிறாய்?" என்று கேட்டது. அதற்கு இளவரசி, "என்னுடைய தங்கப் பந்து இந்தக் குளத்தில் விழுந்து விட்டது" என்று கூறினாள். அதற்கு அந்த தவளை, "நான் உனக்கு உதவுகிறேன். ஆனால் பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்?" என்று கேட்டது. அதற்கு அந்த இளவரசி, "நீ என்ன கேட்டாலும் நான் உனக்கு தருகிறேன்" என்று வாக்குறுதி அளித்தாள். 

உடனே அந்த தவளை குளத்தில் குதித்து தங்கப் பந்தை எடுத்து இளவரசிக்கு கொடுத்தது. அந்தப் பந்தை பார்த்த உடன் இளவரசி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். இளவரசி, "நான் உனக்கு என்ன செய்வேன் என்று கேட்டாள்" அதற்கு அந்த தவளை, "நான் உனக்கு நண்பனாக இருக்க வேண்டுகிறேன். உனது தங்கத்தட்டில் சாப்பிடவும் உனது அரண்மனையில் தங்கவும் ஆசைப்படுகிறேன்" என்று கூறியது. இளவரசியும் ஒப்புக்கொண்டாள்.

அடுத்த நாள் காலை, அந்த தவளை கதவைத் தட்டியது. ஆனால் இளவரசி கதவைத் திறக்கவில்லை. அரண்மனைக்கு வெளியில் தவளை, "நான் உன்னோடு வாழ ஆசைப்படுகிறேன்" என்று கத்தியது. இதைக்கேட்ட இளவரசி தேம்பித் தேம்பி அழுதாள். தன் தந்தையிடம் சென்று இதை பற்றி கூறினாள். அதற்கு அரசர், "உன்னுடைய வாக்குறுதியை நீ கடைபிடிக்க வேண்டும். நீ அந்த தவளையை அரண்மனையில் வாழ சம்மதிக்க வேண்டும். "என்று கூறினார். 

இளவரசிக்கு வேற வழி தெரியவில்லை. அன்று இரவு அந்த தவளை இளவரசிக்கு அருகில் அமர்ந்து. அவளுடைய தங்கத்தட்டில் சாப்பிட்டது. அவளைப் பின்தொடர்ந்தது. இளவரசிக்கு அந்த தவளையை சுத்தமாக பிடிக்கவில்லை. தவளை அவளுடைய தலையணையில் படுக்க சென்ற போது இளவரசி கோபமடைந்து தவளையை தூக்கி வீசினாள்.

உடனே அந்த தவளை ஒரு அழகான இளவரசராக மாறினாள். அந்த இளவரசர் தானொரு சூனியக்காரியின் சாபத்தால் இப்படி தவளையாக மாறினேன் என்று கூறினான். பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகினர். 
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர். 


நீதி:- நாம் மற்றவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil