Current affairs in tamil - August 2021

Current Affairs in Tamil for TNPSC Exam - August 2021

TNPSC CURRENT AFFAIRS 2021 IN TAMIL: "Kalvi Thuli" provides you Current affairs in Tamil for TNPSC, TET, RRB, UPSC, Banking and other competitive exams. Here is the current affairs for August 2021 in Tamil covering the following topics: International, National and State current affairs, sports, important days, economic, etc. 


1. ஜப்பானில் நடைபெற்ற பராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் C4 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?

விடை: பவினாபென் பட்டேல்.


2. டோக்கியோ பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் பி1 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ் எச்1 பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?

விடை: சிங்கராஜா அதானா.


3. டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் டி63 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?

விடை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன்.


4. எல்லை பாதுகாப்பு படையின் (BSF) புதிய டிஜி ஆக பொறுப்பேற்று கொண்டுள்ளவர் யார்?

விடை: பங்கஜ் குமார் சிங்.

குறிப்பு : BSF : Border Security Force.


5. இந்தோ திபெத் எல்லை காவல்படையின் (ITBP) டிஜி ஆக ஒரு பெற்றுக்கொண்டுள்ளவர் யார்?

விடை: சஞ்சய் அரோரா.


6. சமீபத்தில் இந்தியாவில் உள்ள எந்த நகரில் மாட்டிறைச்சி மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது?

விடை: உத்திரபிரதேசத்தில் உள்ள மதுரா.


7. டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?

விடை: சுமித் ஆண்டில்.


8. உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சினிமா தியேட்டர் எங்கு உள்ளது?

விடை: லடாக்.


9. டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?

விடை: ராஜஸ்தானைச் சேர்ந்த அவனி லெகாரா.


10. சமீபத்தில் எந்த நாட்டில் உள்ள சிறார்களுக்கு "வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டு" என்ற புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது?

விடை: சீனா.


11. இந்திய சுதந்திர தினம் ஆண்டு தோறும் என்று கொண்டாடப்படுகிறது?

விடை: ஆகஸ்ட் 15.


12. விமானப் படையினரின் சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு வழங்கப்படும் வாயு சேனா பதக்கம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

விடை: ஸ்குவாட்ரான் தலைவர் தீபக் மோகனனன் மற்றும் வின் கமேண்டர் உத்தர் குமார்.


13. "அன்னை தமிழில் அர்ச்சனை" திட்டம் முதல் முறையாக தமிழ்நாட்டில் எங்கு தொடங்கப்பட்டது?

விடை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்.


14. "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற திட்டம் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது?

விடை: தமிழ்நாடு.


15. டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற அணி எது?

விடை: இந்தியா.


16. ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யார்?

விடை: ரவிக்குமார் தாகியா.


17. கனடாவின் "Order of British Columbia" விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

விடை: இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் திவாரி.


18. இந்தியாவின் முதல் இதய செயலிழப்பு உயிரி வங்கி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

விடை: கேரளாவில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநல் மருத்துவ அறிவியல் நிறுவனம்.


19. டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் ஆடவருக்கான 67 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?

விடை: பஜ்ரங் புனியா.


20. இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே நடைபெற்ற 'சையத் தல்வார்' கடற்படை கூட்டுப் பயிற்சி எங்கு நடைபெற்றது?

விடை: அபுதாபி.

Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil