Latest current affairs in tamil - January 2022
January 2022 Current Affairs in Tamil
TNPSC CURRENT AFFAIRS 2022 IN TAMIL: "Kalvi Thuli" provides you Current affairs in Tamil for TNPSC, TET, RRB, UPSC, Banking and other competitive exams. Here is the current affairs for JANUARY 2022 in Tamil covering the following topics: International, National and State current affairs, sports, important days, economic, etc.
1. சமீபத்தில் புதிய covid திரிபு "டெல்டாகிரோன்" எங்கு கண்டறியப்பட்டுள்ளது?
விடை: சைப்ரஸ்.
2. பிரவாசி பாரதிய திவாஸ் ஆண்டுதோறும் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: ஜனவரி 9.
3. பஞ்சாப் மாநிலத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
விடை: விரேஷ் குமார் பாவ்ரா.
4. உலக ஹிந்தி மொழி தினம் ஆண்டுதோறும் என்று கடைபிடிக்கப்படுகிறது?
விடை: ஜனவரி 10.
5. தேசிய இளைஞர்கள் தினம் ஆண்டுதோறும் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: ஜனவரி 12.
6. சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த பொருளாதார வல்லுனராக நியமிக்கப்படுபவர் யார்?
விடை: பியர் ஆலிவர் கூரிஞ்சஸ்.
7. உ.பி. சட்டமன்றத் தேர்தல் - 2022 எத்தனை கட்டங்களில் நடைபெற உள்ளது?
விடை: ஏழு.
8. சமீபத்தில் புதிய covid திரிபு "IHU" எங்கு கண்டறியப்பட்டுள்ளது?
விடை: பிரான்ஸ்.
9. உலக பிரெய்லி தினம் ஆண்டுதோறும் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
விடை: ஜனவரி 4.
10. கல்பனா சாவ்லா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் எந்த பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
விடை: சண்டிகர் பல்கலைக்கழகம்.
11. இத்தாலியில் நடைபெற்ற 'வெர்கானி கோப்பை' சதுரங்கப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர் யார்?
விடை: தமிழ்நாட்டை சேர்ந்த பரத் சூப்பரமணியம்.
12. 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: எழுத்தாளர் அம்பை.
குறிப்பு : சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
13. பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியின் புதிய உறுப்பினராக எந்த நாட்டை சேர்த்துள்ளது?
விடை: எகிப்து.
14. தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எந்த மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது?
விடை: உத்தர பிரதேசம்.
15. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பாகிஸ்தான் வீரர் யார்?
விடை: முகமது அபீஸ்.
16. இந்திய கடலோர காவல்படையின் புதிய தலைவராக பதவி ஏற்றுக் கொண்டவர் யார்?
விடை: டிஜி வி.எஸ் பதானியா.
17. ரயில்வே வாரியத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் யார்?
விடை: வினை குமார்.
18. தூய்மை கங்கை தேசிய திட்டத்தின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: அசோக் குமார்.
19. ONGC இன் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் யார்?
விடை: அல்கா மிட்டல்
20. 2022ஆம் ஆண்டிற்கான ஐநா பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத தடுப்பு குழுவின் தலைவராக பொறுப்பேற்று கொண்டுள்ளவர் யார்?
விடை: இந்தியத் தூதர் டி.எஸ் திருமூர்த்தி.
Comments
Post a Comment