கப்பலோட்டிய தமிழன் - கட்டுரை

கட்டுரை - கப்பலோட்டிய தமிழன் - வ.வு. சிதம்பரம் பிள்ளை

குறிப்பு சட்டகம்
  • முன்னுரை
  • பிறப்பு
  • கல்வி
  • திருமண வாழ்க்கை
  • நாட்டுப்பற்று
  • தண்டனை
  • தமிழ் தொண்டு
  • முடிவுரை

முன்னுரை
இந்திய விடுதலைக்காக போராடிய பல தியாகிகளுள் ஒருவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ. வு. சிதம்பரனார் பற்இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு
வ. உ. சிதம்பரனார் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் உலகநாதப்பிள்ளைக்கும் பரமாயி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.

கல்வியும் வாழ்வும்
வ. உ. சிதம்பரம் முதலில் திண்ணைப்பள்ளிக் கூடத்தில் படித்தார்; பின்னர் இவரின் தந்தையார் இவருக்கெனவே உருவாக்கிய பள்ளியில் பயின்றார். இளமையில் விறுவிறுப்பாகவும் துடிப்பாகவும் இருந்தார். பல விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டார். தமிழின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவராக விளங்கினார். பள்ளிக் கல்வியை முடித்தார். இவர் தந்தையாரின் முயற்சியால் ஒட்டப்பிடாரம் வட்டத்தில் அலவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். இப்பணியில் சிதம்பரத்தால் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை. திருச்சிராப்பள்ளியில் சட்டம் பயின்றார். 1895 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார். இவரின் பாட்டனார் வழக்கறிஞர். இவரை அடியொற்றி சிதம்பரமும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார். ஏழை எளியவர்களுக்கு இத்தொழில் மூலம் உதவினார்.

திருமண வாழ்க்கை

   சிதம்பரனாருக்கு 23 வயதாகும் போது அவருடைய தந்தை திருச்செந்தூர் பிள்ளையவர்களின் மகள் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து வைத்தார். சிதம்பரனார் சமூக ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்தார். எல்லோரையும் சமமாகக் கருதும் மனப்பக்குவம் அவரிடமிருந்தது. தமிழின் மீது அவருக்கிருந்த ஆர்வத்தால் பலருக்கும் தமிழைக் கற்பித்தார்.

நாட்டுப் பற்று

வ. உ. சிதம்பரனார் தமிழ் மொழியின் மீதும் நாட்டின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர். தேச விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தத் தருணம் அது. வ.உ. சிதம்பரனார் தனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டார். அந்நிய துணிகளை எரித்தார். ஆங்கிலேயர்கள் இந்திய மக்களைச் சுரண்டுவதைக் கண்டார். எனவே ஆங்கிலேயரின் வணிகத்தைத் தகர்க்க எண்ணினார். 1906 ஆம் ஆண்டு சுதேசி கப்பல் கம்பெனியை தொடங்கினார். இதற்கு இந்திய வர்த்தகர்கள் பலரும் உதவினர். தமிழனின் கப்பல், அலை கடலில் சீறிப்பாய்ந்தது. சரக்கு வணிகமும், மக்கள் பயணமும் சுதேசிக் கப்பலில் நடைபெறத் தொடங்கிற்று. சிதம்பரனார் கப்பல் போக்குவரத்தோடு விவசாயம் நெசவு ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்தினார். இவற்றுக்கெனச் சங்கங்களை அமைத்தார் சென்னை விவசாயக் கைத் தொழிற்சங்கம், தரும நெசவு சாலை தேசியப்பண்டகச் சாலை ஆகியவை சிதம்பரனார் உருவாக்கியவை ஆகும்.

         வ. உ. சிதம்பரனார் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டார்.இந்திய காங்கிரசின் இயக்கங்களில் பங்கேற்றார். இவரின் தீவிர விடுதலைப்போராட்ட ஈடுபாடும் ஆங்கிலேய எதிரிப்பும் ஆங்கிலேய அரசினரின் கோபத்துக்குள்ளானது. சிதம்பரனார் மீது அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஞ்ச், குற்றச்சாட்டுகளை அடுக்கினார். கப்பலோட்டியது முதற் குற்றம். அனுமதியின்றி கூட்டம் கூட்டியது இரண்டாவது குற்றம். பாமர மக்களை 'வந்தே மாதரம்' என்று முழக்கமிட வைத்தது மூன்றாம் குற்றம் என குற்றங்களின் பட்டியல் நீண்டது. இதற்குப் பதிலளித்த சிதம்பரனார் எங்கள் நாட்டில் நாங்கள் கூடிப் பேச உங்கள் அனுமதி வேண்டுமா? தாய்நாடு வாழ்க என்று முழங்குவது குற்றமா? எங்கள் வாணிபம் வளர. வளம் பல பெருகக் கப்பல் ஓட்டுவது குற்றமா? சதையைத் துண்டு துண்டாக வெட்டி எடுத்து வேதனைப்படுத்தினாலும் எங்கள் முடிவு மாறாது. இதயத்தே வளரும் சுதந்திரப் பற்றும் மாறாது இது திண்ணம் என்றார். "வந்தே மாதரம்” என்றுயிர்ப்போம் வரை வாழ்த்துவேன் என்று அஞ்சாது கூறினார். மன்னிப்புக் கோர மறுத்தார். ஊர்தாண்டல் தடை உத்தரைைவ ஏற்க மறுத்தார். எனவே கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டார். இவருடன் தேசபக்தர் சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டார்.

வழங்கப்பட்ட தண்டனை

வ .உ. சிதம்பரனாருக்கு நாற்பது ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோயம்புத்தூர், கண்ணனூர் ஆகிய ஊர்களில் உள்ள சிறைகளில் தண்டனைக் காலத்தைக் கழித்தார். சிதம்பரனார் சிறைச்
சாலைகளில் கடுந்துன்பத்துக்குள்ளானார். செக்கிழுத்தார். சரியான உணவில்லை. உறையுள் இல்லை. உடல் மெலிந்தார். எனினும் தளராமல் நெஞ்சுரம் கொண்டவராய் விளங்கினார். சிதம்பரனார் சிறை சென்றதால் அவர் தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி பின்னடைவு அடைந்தது. தன் தண்டனைக் காலம் முழுவதையும் சிறையில் கழித்தார். 1912 ஆம் ஆண்டு விடுதலையடைந்தார். அரசியல் நிலைகளில் மாற்றத்தை விரும்பினார். காந்தியடிகளை உலகமெல்லாம் புகழும் காந்திமா முனிவன் என்று புகழ்வார் சிதம்பரனார். எனினும் காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தை ஏற்க மறுத்தார். 'போராட்டம்' தீவிரப்படுத்தப்பட வேண்டும் என விரும்பினார்.காங்கிரஸின் இயக்கத்திலிருந்து வெளியேறினார். அரசியலிலிருந்தும் ஒதுங்கினார். நோய்வாய்ப்பட்டார் எனினும் தேச விடுதலையில் தீராத வேட்கையும் நம்பிக்கையும் கொண்டு விளங்கினார். 1936 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் வ.உ. சிதம்பரனார் மறைந்தார்.

தமிழ் தொண்டு
வ. உ.சிதம்பரனார் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராகத் திகழ்ந்தவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களைச் செம்மையாகக் கற்று தேர்ந்தார். அவர் ஒரு நூலாசிரியர், உரை ஆசிரியர், பதிப்பாசிரியர், மொழி பெயர்ப்பாளர்.
சிதம்பரனார் உரைநடை, செய்யுள் நூல்கள் பல இயற்றியுள்ளார். மெய்யறம், மெய்யறிவு, வலிமைக்கு மார்க்கம். சாந்தி மார்க்கம், வள்ளியம்மை சரித்திரம் என்பவை அவர் எழுதிய நூல்கள். திருக்குறளுக்குப் பலர் உரை எழுதி உள்ளனர். மணக்குடவர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு இளம்பூரணர் உரையைச் செம்பதிப்பாக வெளியிட்டார். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தையும் உரையோடு வெளியிட்டார். நன்னிலை, சிவஞானபோதம் ஆகிய நூல்களுக்குச் சிதம்பரனாரே உரை எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கிலப்பேராசிரியரின் இரண்டு நூல்களை 'மனம் போல் வாழ்வு 'அகமே புறம்' என்றவாறு மொழிப்பெயர்த்தார். இவ்வாறு பல நூல்களைப்படைத்த வ. உ. சிதம்பரனார் சமூகம் பின்பற்றத் தக்க மாமனிதராகத் திகழ்ந்தார்.


Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil