Robinson Crusoe story
Robinson Crusoe story in tamil
ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த டானியல் டீஃபோ எழுதிய ராபின்சன் க்ருசோ என்ற புதினத்தின் கதை சுருக்கத்தை காண்போம்.
ராபின்சன் க்ரூசோ ஒரு தைரியமான இளைஞன். அவருக்கு சாகசங்கள் மிகவும் பிடிக்கும். அவருக்கு பத்தொன்பது வயதாக இருந்தபோது, அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி கடலில் பயணம் மேற்கொண்டார். ஒரு நாள், அவரது கப்பலை பெரிய புயல் தாக்கியதால் மூழ்கதொடங்கியது. பிறகு ராபின்சன் ஒரு தீவுக்கு நீந்தி சென்றான். அவன் மிகவும் சோர்வாக இருந்ததால், அவன் அப்படியே தூங்கிவிட்டான். அவர் விழித்து பார்த்த போது, அவருக்கு அருகில் ஒரு சிறிய நாய் இருப்பதைக் கண்டார். அவர்கள்
இருவரும் அந்த இடத்தில் தனியாக இருந்தனர்.
ராபின்சன் தீவை சுற்றி பார்த்தார், அப்போது அங்கு ஒரு உடைந்த கப்பலைக் கண்டார். அதிலிருந்து சில உணவு, துப்பாக்கிகள், ஆடைகள் மற்றும் கருவிகளை அவர் எடுத்து கொண்டார். பிறகு அந்த தீவில் ஒரு கூடாரம் கட்டினார். அவர் ஒரு மர சிலுவையில் அவர் அந்த தீவிற்கு வந்த நாளை குறித்தார். அதுவே அவருக்கு காலண்டரக அமைந்தது. தீவில், அவர் பல வகையான வெள்ளாடுகளையும் முயல்களையும் கண்டார், அதை அவர் சுட்டு சாப்பிட்டார். பின்னர், அவர் ஒரு சிறிய படகு ஒன்றை கட்டினார்.
நாட்கள் கழிந்தன. ஒரு நாள், ராபின்சன் ஒரு மனிதனின் கால் தடத்தைக் கண்டார். ஒரு இளைஞனை சில பழங்குடி மனிதர்கள் துரத்துவதைப் பார்த்தார். ராபின்சன் தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டார். பழங்குடி மக்கள் பயந்து ஓடிவிட்டனர். அந்த இளைஞனை பழங்குடி மக்களிடமிருந்து காப்பாற்றினார் ராபின்சன். அந்த நபரிடம் பெயரை கேட்ட பொது அந்த நபருக்கு பேச தெரியவில்லை. ராபின்சன் அவருக்கு Friday என்று பெயர் வைத்தார். ராபின்சன் அவருக்கு ஆங்கிலத்தில் பேச கற்று கொடுத்தார்.
ஒரு நாள், அவர்கள் இருவரும் நரமாமிசம் சாப்பிடுபவர்களிடமிருந்து சிலரைக் காப்பாற்றினர். அவர்களில், Fridayவின் தந்தை மற்றும் அவரது நண்பர்களும் இருந்தனர். அவர்கள் சில நாட்கள் தங்கியிருந்தனர். அந்த தீவை விட்டு வெளியே செல்ல ஆசைபட்டனர்.
மற்றொரு நாள், Friday ஒரு கப்பல் பற்றி ராபின்சனுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் இருவரும் ஒளிந்து கொண்டு கப்பலைப் பார்த்தார்கள். கப்பலில் கடல் கொள்ளையர்கள் கேப்டனை கைது செய்து வைத்தனர். பிறகு ராபின்சன், Friday கடல் கொல்லையற்களிடம் போராடி கப்பலை மீட்டனர். கேப்டன் உடன் ராபின்சனும் Fridayஉம் தீவிலிருந்து இங்கிலாந்துக்கு பயணம் செய்தனர். சுமார் இருபத்தெட்டு ஆண்டுகள் பிறகு ராபின்சன் அந்த தீவை விட்டு வெளியே சென்றார்.
Comments
Post a Comment