NIOS Class 12 Tamil guide

 NIOS Intext Questions

Tamil - 304 Senior secondary - Class 12

  1. பாலசரசுவதி எந்த ஊரைச் சார்ந்தவர்?

பால சரஸ்வதி ஆடற்கலை வளர்த்த தஞ்சாவூரை சார்ந்தவர். 


  1. ஆடற்கலை மும்மூர்த்திகள் யார்? 

திருவாரூர் ஞானம் அம்மாள்ல, தஞ்சாவூர் பாலசரஸ்வதி, மதுராந்தகம் ஜெகதாம்பாள் ஆகியோரைஆடற்கலை மும்மூர்த்திகள் என்கிறோம். 


  1. பால சரஸ்வதிக்கு பத்மபூஷன் பட்டம் அளித்தவர் யார்? 

1977-ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் பாலசரஸ்வதிக்கு பத்மபூஷன் பட்டம் அளித்தார்.


  1. தமிழகத்தின் அடையாளச்சின்னம் எது?

தமிழகத்தின் அடையாள சின்னமாக கோயிலின் கோபுரம் விளங்குகிறது.


  1. இசையை எத்தனை வகையாக வகைப்படுத்துவர்? 

இசையை நாட்டுப்புற இசை, செவ்வியல் இசை என இரு வகைப்படுத்துவர்.


  1. காவடிச்  சிந்து எந்த தெய்வ  வழிபாட்டின் அடிப்படையில் தோன்றியது?

காவடிச்  சிந்து முருக வழிபாட்டின் அடிப்படையில் தோன்றியது?


  1. காவடிச் சிந்து என்றால் நமக்கு நினைவுக்கு வருபவர் யார்? 

காவடிச் சிந்து என்றால் நமக்கு நினைவுக்கு அண்ணாமலை ரெட்டியார் அவர்கள். 


  1. உலகின் பழமையான இசைவடிவம் கொண்ட பா எது?

செவ்விசைப் பாடல்கள் உலகின் பழமையான இசைவடிவம் கொண்ட பாக்கள் ஆகும்.


  1. வாசி தீரவே என தொடங்கும் பாடல் எந்த தலத்தின்மீது பாடப்பட்டது?

வாசி தீரவே என தொடங்கும் பாடல் திருவீழிமிழலை தலத்தின்மீது பாடப்பட்டது.


  1. மயில் நடனத்தின் சிறப்புகள் இரண்டு கூறு.

மயில் நடனம் நாட்டுப்புற ஆடல் ஆகவும், செவ்வியல் ஆடல் ஆகவும் அமையும். மயில் நமது தேசிய பறவையாகும். மேலும் முருக வழிபாட்டுக்கு உரிய பறவை ஆகும். மயில் குளிரில் நடுங்கி ஆடுவது போன்ற காட்சியை சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில் காணலாம். மயிலின் தோகை அழகு சிறப்பானதாகும். கானகத்தில் குளிர் இளம் தென்றலில் தன் சிறகு விரித்து ஆடும் காட்சியைக் கண்டு அதே நிலையில் இந்த நடனத்தை அமைத்துள்ளனர்.


  1. பண்டைய கூத்தை இக்காலத்தில் எப் பெயரால் அழைக்கின்றனர்?


பண்டைய கூத்தை இக்காலத்தில் கிராமிய கலைகள் என்று அழைக்கின்றனர்.


  1. தமிழர் திருநாள் எது?

தைப்பொங்கல் விழாவே தமிழர் திருநாள் ஆகும்.


  1. ஏறு தழுவுதல் என்றால் என்ன? 

சீறி வரும் கட்டிளங் காளையை அடக்கும் வீர விளையாட்டை பண்டைய காலத்தில் ஏறு தழுவுதல் என்று கூறினர்.


  1. ஏறுதழுவுதலை தற்காலத்தில் எப் பெயரால் அழைக்கின்றனர்?

ஏறுதழுவுதலை தற்காலத்தில் மஞ்சு விரட்டு எனவும் ஜல்லிக்கட்டு எனவும் அழைக்கின்றனர். 


  1. நாட்டுப்புற ஆடல்களில் இரண்டு-ஐ குறிப்பிடுக.

கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம்  போன்றவை நடனங்கள் ஆகும்.


  1. மயில் இந்திய தேசியச் சின்னமாக உள்ளது.


  1. மயில்.முருகக் கடவுளின்.வாகனமாக உள்ளது.


  1. தமிழகத்து கிராமிய கலைகளுள் ஒன்றினை குறிப்பிடுக. 

கோலமிடுதல், கரகாட்டம், காவடியாட்டம், கும்மி ஆட்டம், கோலாட்டம், போன்றவை தமிழகத்து கிராமிய கலைகள் ஆகும்.


  1. தமிழர் திருநாள் என்று நடைபெறும்.

தைத் திங்கள் முதல்நாள் தமிழர் திருநாள் ஆகும்.


  1. கோலக் கலையை இன்று எப் பெயரால் அழைக்கின்றனர்?

கோலமிடுதல்.


  1. மஞ்சுவிரட்டுக்கு பெயர்பெற்ற தமிழக ஊர் பெயரை குறிப்பிடுக.

மஞ்சுவிரட்டுக்கு பெயர்பெற்ற தமிழக ஊர்அலங்காநல்லூர் ஆகும்.


  1. காளையை அடக்கி வெள்ளையம்மாளை மணந்த தளபதி யார்?

வீரபாண்டிய கட்டபொம்மன் தளபதிகளுள் ஒருவரான வெள்ளையத்தேவன் காளையை அடக்கி வெள்ளையம்மாளை மணந்தார்.


  1. வைணவ கோயில்களில் பாடப்படும் பாடல்களை திவ்வியப் பிரபந்த பாடல்கள் என்பர். 


  1. மதுரையில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பெண்மணி மங்கையர் கரசி ஆவார்.


  1. நாட்டுப்புற இசையின் சிறப்பு ஒன்றினை கூறுக.

இயற்கையாக அமையப் பெற்றதே நாட்டுப்புற இசையின் சிறப்பம்சமாகும்.


  1. செம்மொழி விளக்குக.

செவ்வியல் மொழி


  1.  உலகச் செம்மொழி மாநாடு எங்கே நடைபெற்றது?

 கோயம்புத்தூரில் நடைபெற்றது


  1.  செம்மொழிப் பண்புகளில் இரண்டினைக் கூறுக

தொன்மை,  தனித்தன்மை


  1. லெமோரியா எங்கே இருந்தது? 

குமரிக்கண்டத்தில் இருந்தது.


  1. நமக்கு கிடைத்துள்ள தொன்மை நூல் எது?

 தொல்காப்பியம்


  1. வாழ்வியலின் இலக்கணம் கூறும் பகுதி எது?

பொருள் இலக்கணம்


  1. அகம் என்பது எதனைக் குறிக்கும்?

  தன்னளவில் மகிழ்வது


  1. அறநெறி இன்னார் இன்னார்க்கு உரியது என்று  கூறாமையின் காரணம் என்ன?

எல்லோருக்கும் பொதுவானது என்பதால்


  1. நடுநிலையைக் காட்டும் கருவி

 துலாக்கோல்


  1. இலையோடு அரசாட்சி செய்த மன்னன் பெயர் என்ன?

 மனுநீதிச் சோழன்




  1.  திராவிட மொழிகளை ஆராய்ந்த அறிஞர் யார்?

 கால்டுவெல்


  1. திராவிட மொழிக் குடும்பத்தின் தலைமை மொழி எது? 

தமிழ்


  1. பண்பாட்டின் வெளிப்பாட்டினை எவை வாயிலாக அறியலாம்?

  கதைகள் வாயிலாகக் காணலாம் 

  1. பட்டறிவு - பிரித்து பொருள் கூறுக.

பட்ட + அறிவு

  1.  கலைச்சொல் - பொருள் கூறுக.

கலைநுட்பம் கூறும் சொல் 

  1.  சினிமா, டெலிவிஷன் -  தமிழாக்கம் தருக

 சினிமா - திரைப்படம், டெலிவிஷன் - தொலைக்காட்சி

  1. சமயச்  சார்பில்லாத் தொன்மை இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள்

  1. ஐந்திலக்கணங்கள் யாவை? 

 எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

  1. தெய்வீகம் பொருள் தருக.

தெய்வத்தை உடையது


  1. நாடகச் சந்திகள் எத்தனை?

 5 


  1. அழகுக்கலை கூறிய வேறு பெயர்களில் ஒன்றினை குறிப்பிடுக

 இன் கலை, கவின் கலை,  நற்கலை 


  1. பக்தி இலக்கியங்கள் கலையை எவ்வாறு கருதுகின்றன?

 இறை ஆற்றலாகக் கருதுகின்றன.


  1. எழுத்திலக்கத்தை எத்தனை வகையாக பிரிப்பர்?

இரண்டு வகையாக 


  1. தமிழுக்கும் அமுதென்று பேர் என்று கூறியவர் யார்?

பாவேந்தர் பாரதிதாசன் 


  1. செம்மொழியின் பண்புகளில் நான்கைக் கூறுக.


தொன்மை,  தனித்தன்மை,  அனைவரும் ஏற்கும் பொதுமைப் பண்பு,  நடுநிலை,  பல மொழிகளுக்குத் தாயாக விளங்கல்,  பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு,  பிறமொழித் தாக்கமில்லாத் தனித்தன்மை,  இலக்கிய வளம்,  உயர் சிந்தனை,  கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு,  சிறப்பான மொழிக்கோட்பாடு என்பவை செம்மொழியின் பண்புகளாகும். 


  1. தமிழ் மொழியின் தொன்மைக்கு ஒரு உதாரணம் தருக.


மனித இனம் லெமோரியா என்கிற குமரிக்கண்டத்தில் தோன்றியது என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். குமரிக் கண்டத்தில் தோன்றிய மனிதன் பேசிய மொழி தமிழ்.


இன்றுவரை தமிழில் கிடைத்துள்ள நூற்களுள் முதல் நூலாகத் தொல்காப்பியம் உள்ளது. சுமார் 2,500 ஆண்டுகள் பழமை உடையது. இந்நூலுக்கு முன்பே பல நூற்கள் இருந்தன. இவற்றின் மூலம் உலக மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று என்பதனை அறியலாம்.


  1. தமிழ்மொழியின் தனித்தன்மை பற்றிக் கூறுக.

தமிழ் மொழியில் அமைந்த இலக்கண நூல்களும் இலக்கியப் படைப்புகளும் தனி நோக்கும் போக்கு உடையன.   தமிழ் மொழியில் எழுத்து, சொல், தொடர் இலக்கணக் கூறுகள் உள்ளன. தமிழ்மொழியில் வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் பொருள் இலக்கணம் உள்ளது. இவ்விலக்கணப் பகுதி தமிழ் மொழியின் தனித்தன்மையை உணர்த்தும் பகுதியாக அமைந்துள்ளது.

 

  1. அகப் பாடலின் சிறப்பு என்ன?


தன்னளவில் மகிழ்வதனை அகம் என்று கூறுகிறோம். அகப்பாடல்கள் காதல் வாழ்வை   சிறப்பிக்கிறது. 

 

  1. சான்றோர் எவ்வகையில் விளங்குவர்?


துலாக்கோல் நடுநிலையோடு பொருள்களை அளவிடுதல் போல் உலக மக்களை உறவினர்,  பகையாளி என்று கருதாமல் நடுநிலையோடு சான்றோர்கள் உறவு கொள்வர். இந்த நிலையில் எல்லோரையும்  மதிக்கும் பண்புடையவர்களாகச் சான்றோர்கள் விளங்குவர்.

 

  1. இந்தியத் தென் மொழிகளை எவ்வாறு அழைப்பர்?


இந்தியத் தென் மொழிகளை திராவிட மொழிக் குடும்பம் என்றழைப்பர்.


  1. பட்டறிவு என்றால் என்ன?


மனித அனுபவத்தின் அடிப்படையில் பெற்ற அறிவு  பட்டறிவு எனப்படும்.  தமிழகத்தில் காணப்படும் கோயில்களில் காணப்படும் கலைகள் அனைத்தும் பட்டறிவின் வெளிப்பாடுகளாக உள்ளன.


  1.  தமிழ் உரைநடை இலக்கியங்கள் இரண்டினைக் கூறுக.


நாவல்,  சிறுகதை,  நாடகம் போன்றவை தமிழ் உரைநடை இலக்கியங்களாகும்.


  1. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ - பொருள் தருக.


உலகம் நம்மது, உலக மக்கள் நம் உறவினர் என்பதே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர’ என்பதன் பொருள் ஆகும்.


59 . அழகின் சிரிப்பு -  நூலாசிரியர்  யார்?

பாரதிதாசன்


60. தமிழ்ச்சொல் வகைகளை கூறுக. 


இயற்சொல், திரிசொல், திசைச்சொல் மற்றும் வடச்சொல் தமிழ்ச் சொல்லின் வகைகள் ஆகும்.


61. பிரபந்தம் என்னும் வடசொல்லின் பொருள் யாது ?

நன்கு கட்டப்பட்டது


62. சிற்றிலக்கியங்களைத் தொல்காப்பியம் எந்த வனத்தினுள் அடக்குகிறது

விருந்து


63. முக்கூடலுக்குத் தற்போது வழங்கும் பெயர் யாது?

 சீவலப்பேரி


64.  முக்கூடலில் எழுந்தருளியுள்ள தெய்வம் எது?

 திருமாலாகிய அழகர்


65. சிற்றிலக்கியங்கள் குறித்து எழுதுக.

 எழுத்து முதலிய பலகை உறுப்புகளால் அகமும் புறமும் ஆகிய பொருளுக்கு இடமாக இயற்றப்பட்டவை சிற்றிலக்கியங்கள் ஆகும். சிற்றிலக்கியங்களுள் முதன்மையாக கருதப்படுவன அந்தாதி,  பிள்ளைத்தமிழ், பரணி கலம்பகம்,  கோவை, உலா மாலை,  தூது,  பள்ளு குறவஞ்சி போன்றவையாகும்.


66.  சிற்றிலக்கியங்கள் ஐந்தினைக் குறிப்பிடுக.

அந்தாதி,  பிள்ளைத்தமிழ், பரணி கலம்பகம்,  கோவை, உலா மாலை,  தூது,  பள்ளு குறவஞ்சி. 


67. முக்கூடற் பள்ளு பற்றிக் குறிப்பு வரைக.

பள்ளு நூல்களில் தலைசிறந்து விளங்குவது முக்கூடற்பள்ளு. பள்ளு நூல்களில் முதன்முதலில் தோன்றியதும் இதுவே. தாமிரபரணி ஆற்றோடு சிற்றாறும் கயத்தாறும் கூடும் இடம் முக்கூடல் எனப்படும். இவ்வூரில் எழுந்தருளியுள்ள அழகரின் பெருமையை இந்நூல்  கூறியுள்ளது. நிலத்தின் வகைகள், மாட்டின் வகைகள், உயர் தொழில் கருவிகள் ஆகியவை இந்நூலில் கூறப்பட்டுள்ளன.


68. ஆற்றில் வெள்ளம் வருவதற்கான அறிகுறிகள் யாவை?

தென்மேற்குத் திசை மின்னல் ஆகிய  கேரள மின்னலும்,  தென்கிழக்குத் திசை மின்னல் ஆகிய  ஈழ மின்னலும் சூழ வளைத்து மின்னுதல்,  பூங் கொம்புகளை வட்டமாகச் சுழற்றிச் சுழற்றி காற்று அடித்தல், கேணி நீரிலே உண்டாகிய தவளை கூப்பிடுதல்,  சேற்றிலே வாழும் நண்டு தன் குழிக்குள்  மழைநீர் வந்து தாக்காதபடி சேற்றினால் வளையை அடைத்தல்,  வானம்பாடிப் பாடி பறவைகள்  ஆடிப் பாடுதல்  ஆகியவை வெள்ளம் வருவதற்கான அறிகுறிகளாகும்.


69.  தமிழ் விடு தூது யார் மீது பாடப்பெற்றது?

மதுரைச் சொக்கநாதர் மீது பாடப்பெற்றது.


70.  சிவபெருமானின் மனைவி பெயர் என்ன?

 உமையம்மை.


71.  கணபதி மேற்கொண்ட செயல் யாது?

 ஆகமச் சுவடிகளைக் கடலில் வீசி எறிந்தார்.


72.  முருகப்பெருமானின்  நல்லூரை தந்த நூல் யாவை?

இறையனார் அகப்பொருள் உரைக்கு.


73.  நாயன்மார்கள் நால்வர் பெயர் எழுதுக.


திருஞானசம்பந்தர்,  திருநாவுக்கரசர்,  சுந்தரர்,  மாணிக்கவாசகர்


74.  மூன்று தமிழையும் ஓதியவர்

அகத்தியர்


75 . தமிழ் மொழியின் தொன்மையான இலக்கணம்

தொல்காப்பியம்


76. தூது என்பதற்கு விளக்கம் தருக.

தூது என்பது ஒரு தலைவனை கண்டு காதல் கொண்ட மங்கை ஒருத்தி தன் காதலை உயர்திணைப் பொருள்களிடத்தேனும் அஃறிணைப் பொருள்களிடத்தேனும் எடுத்துக்கூறி தூது செல்லுமாறு ஏவும் பொருள் அமைந்தது.


77.  தமிழ் விடு தூது உரைக்கும் சிவபெருமான் சிறப்புகளை எடுத்துரைக்க .


சிவராசதானி, மதுரை சிவபெருமான் சுந்தரர் ஆகி வந்து அரசு புரிந்த இடம். சிவபெருமான் 49 சங்கப் புலவர்களுள் ஒருவராக (இறையனார் என்ற பெயர் உடையவராக) இருந்தார்.


சிவபெருமான் தமிழரசி என்று போற்றும்படி திக்கு விசயம் செலுத்தியவர். சிவபெருமான் உமையாளுக்கு  சிவாகமப் பொருள் கூறினார்.


திருநல்லூரில் திருநாவுக்கரசர் திருக்கோயிலில் உறங்கும்போது சிவபெருமான் வந்து தம் திருவடியை முடியில் வைத்தார். தாழம்பூ பிரம்மனுக்கு சான்றாக வந்து பொய் கூறியதால், அன்று முதல் தாழம்பூவை முடியாது விடுத்தார்.


சிவபெருமான் ஒரு மறையவர் போல் உருவங் கொண்டு தில்லையில் மணிவாசகப் பெருமானிடம் வந்து நின்று ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று இரந்து கோவைப்பா  நானூற்றையும் ஓலையில் எழுதி கையெழுத்திட்டு வைத்து மறைந்தார் போன்றவை சிவபெருமான் சிறப்புகளாக தமிழ்விடு தூது உரைக்கிறது.

 

78.  கணபதியின் செயலை விளக்குக.

சிவபெருமான் உமையாளுக்குச் சிவாகமப் பொருள் கூறும் பொழுது, அதனைப் பாராமுகமாக கேட்டதை உணர்ந்து, உமையை சபித்த்ததால், கணபதி ஆகமச் சுவடிகளை துதிக்கையால் எடுத்து கடலில் வீசி எறிந்தார்.


79.  முருகப் பெருமானின் பெருமையை புலப்படுத்துக.

முருகக்கடவுள்  தடாகையின்  புதல்வன்  உக்கிரகுமார பாண்டியனாக வந்து மதுரையை ஆண்ட பின்னர்,  உப்பூர் கிழார் மகன் ஊமை உருத்திரசன்மனாக வந்து இறையனார் அகப்பொருள் உரைகளுள் நல்லுரை உணர்த்தினான். 


80.  நாயன்மார்கள் நால்வரின் சிறப்புகளைத் தருக. 


சிவராசதானி, மதுரை சிவபெருமான் சுந்தரர் ஆகி வந்து அரசு புரிந்த இடம்.


திருஞானசம்பந்தர் வடமொழி நூல்களையும் தென்மொழி நூல்களையும் அறிந்தார் என்பதும் ஞானம் உணர்ந்தார் என்பதும் வரலாறு .


முதலையுண்ட பிள்ளையைப்பின்  ஈன்று தரச்சொல்லிப் பாடியவர் சுந்தரமூர்த்தி. திருநல்லூரில் திருநாவுக்கரசர் திருக்கோயிலில் உறங்கும்போது சிவபெருமான் வந்து தம் திருவடியை முடியில் வைத்தார்.


சிவபெருமான் ஒரு மறையவர் போல் உருவங் கொண்டு தில்லையில் மணிவாசகப் பெருமானிடம் வந்து நின்று ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று இரந்து கோவைப்பா  நானூற்றையும் ஓலையில் எழுதி கையெழுத்திட்டு வைத்து மறைந்தார்.



81. நும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள தமிழ்விடுதூது  கண்ணிகளின் கருத்தினைத் தொகுத்துரைக்க.


தமிழே சிவபெருமானாகவும், உ மையாகவும், கணபதியாகவும்,  முருகப்பெருமானாகவும், நாயன்மார்கள் நால்வராகவும், அகத்தியராகவும்,  தொல்காப்பியராகவும், மெய்கண்ட தேவராகவும் இருந்தது.

 

82. தமிழ் மொழியில் கிடைத்துள்ள முதல் காப்பியம் எது?

சிலப்பதிகாரம்


83.  ஐம்பெருங்காப்பியங்கள் எவை?

சிலப்பதிகாரம்,  மணிமேகலை,  சீவக சிந்தாமணி,  வளையாபதி,  குண்டலகேசி 


84.  சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

இளங்கோவடிகள்



85.  சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்களைத் தருக.

புகார்க் காண்டம்,  மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்


86. பாண்டிய மன்னர்களின் மனைவி பெயர் என்ன?

 கோப்பெருந்தேவி 


87.  நரை கலந்த நறுங் கூந்தலை உடையவர் யார்?

செம்முது மகளிர்


87. தென்னவர் கோமான்  சிங்கஞ் சுமந்த அரியணை மேல் இருந்தான்.


88. கண்ணகியின் சிலம்பில் உள்ள பரல் எது?

மாணிக்கப் பரல்


89.  தென் திசையில் உள்ள மலை 

 பொதிகை மலை


90. அச்சம் தரும் காட்டை விரும்பியவள் யார்?

 காளி 


91. ________  பெரிய மார்பினை கிழித்தவள் துர்க்கை.


92. புறாவின் துன்பம் தீர்த்தவன் யார்?

சி.பி. மன்னன்


93. தன் மகனை தேர்க்காலிட்டுக் கொன்ற சோழ மன்னன் யார்?

 மனுநீதிச் சோழன்


94. கோவலன் தந்தை பெயரை எழுதுக?

 மாசாத்துவான்


95. கண்ணகியின் சிலம்பு மாணிக்கப் பரல்களைக் கொண்டது.


96.  கோப்பெருந்தேவியின் சிலம்பு முத்துப் பரல்களைக் கொண்டது. 


97.  சிலப்பதிகாரம் பற்றி நீவீர் அறிவன யாவை?

தமிழில் கிடைத்துள்ள முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.  சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள். இயல் தமிழ்க் காப்பியம் இசைத்தமிழ்க் காப்பியம்,  நாடகக் காப்பியம்,  தேசியக் காப்பியம்,  மூவேந்தர் காப்பியம் , குடிமக்கள் காப்பியம்,  வரலாற்றுக் காப்பியம்,  பெண் பெருமை பேசும் நூல் எனச் சிலப்பதிகாரம் போற்றப் பெறுகின்றது. சிலப்பதிகாரம் புகார்க் காண்டம்,  மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்  என்ற 3 காண்டங்களைக் கொண்டுள்ளது. 


98. கோப்பெருந்தேவி கண்ட தீக்கனாவை விளக்குக.

மன்னனுடைய வெண்கொற்றக்குடையோடு செங்கோலும் ஒருசேர கீழே  விழுவது போலவும், அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணி இடைவிடாமல் ஒலிப்பது போலவும் கனவு கண்டாள். இவையே அன்றி, எட்டுத் திசைகளும்  அதிர்வதாகவும், சூரியனை இருள் மறைப்பதாகவும் கனவு கண்டாள்.  மேலும் இரவின்கண் வானவில் தோன்றுவதாகவும்,  பகற்பொழுதில்  விண்மீன்கள் எரிந்து கீழே விழுவதாகவும் கனவு கண்டாள்.


99.  கண்ணகியின் தோற்றம் பற்றி வாயிற்காவலன் பாண்டியனிடம் கூறியவற்றை விவரிக்க. 


பொங்கி எழுகின்ற குருதி அடங்காமையால் பசிய புண்ணை உடைய மகிடாசுரனது பிடரோடு கூடிய தலையாகிய பீடத்தின் மேல் ஏறிய இளங்கொடி போன்றவளும், வெற்றிவேலை ஏந்திய பெரிய கைகளை உடையவளுமாகிய கொற்றவை போல தோன்றுகின்றான். ஆயினும்  அவள் அல்லல். 


இறைவனாகிய சிவபெருமானை ஆடச் செய்து,  அவ்வாடலைக்  கண்டருளிய பத்ரகாளியோ எனில் அவளும் அல்லல். 


அச்சம் தரும் காட்டினை விரும்பிய காளியும், தாருகாசுரனுடைய பெரிய மார்பினைக் கிழித்த துர்க்கையும் ஆகிய இவர்களும் அல்லல். 


பழிவாங்கும் நோக்குடையாள் போலவும், சினங்கொண்டவள் போலவும், மிகுந்த வேலைப்பாடு அமைந்த கணவனை இழந்தவள் ஒருத்தி நம் அரண்மனை வாயிலில் வந்து நிற்கின்றாள் என்று கண்ணகியின் தோற்றம் பற்றி வாயிற்காவலன் பாண்டியனிடம் கூறினான். 


100. ‘யாரையோ நீ மடக்கொடியோய்’ என வினவிய பாண்டியனுக்கு கண்ணகி கூறிய விடையைத் தருக. 


“உண்மை தெரியாத மன்னனே!  சொல்லுகிறேன். கேள் இகழ்தல் இல்லாத சிறப்பினை உடைய தேவர்கள் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை தீர்த்த சிபி என்னும் மன்னனும், அவனே அன்றி, அரண்மனை வாயிலில் கட்டிய ஆராய்ச்சிமணியின் நடுவில் உள்ள நா அசைய, பசுவினது கடைக்கண்ணிலிருந்து ஒழுகுகின்ற கண்ணீர் தன் நெஞ்சினைச் சுடுதலால், தன்னுடைய பெறற்கரிய ஒரே மகனைத் தேர்ச் சக்கரத்தில் இட்டு கொன்ற மனுநீதிச் சோழனும் ஆட்சி செய்த பெரும்புகழ் பெற்ற பூம்புகார் என்னுடைய ஊராகும்.


அவ்வூரில் குற்றமில்லாத சிறப்பினையுடைய புகழ் விளங்குகின்ற பெருங்குடியைச் சார்ந்த மாசாத்துவான் என்னும் வணிகனுடைய ஒரே மகனாகி, ஊழ்வினை துரத்தலால் பொருளீட்டி வாழ்தல் வேண்டி, உனது மதுரை நகரத்தில் புகுந்து, இங்கு என் காற்சிலம்பை விற்பதற்கு வந்தபொழுது, உன்னால் கொலைக்களப்பட்ட கோவலன் என்பவனுடைய மனைவி நான். என் பெயர் கண்ணகி என்பதாகும்” என்று கண்ணகி கூறினாள்.




101. கண்ணகியின் வழக்காடு திறத்தைப் புலப்படுத்துக.


 கண்ணகி பாண்டியனை நோக்கி, “நல்ல அறநெறியில் செல்லாத கொற்கை வேந்தே! என்னுடைய காலில் அணியப் பெற்றதும் நின்னால் கைப்பற்றப்பட்டதுமாகிய பொன்னாற் செய்யப் பெற்ற சிலம்பு மாணிக்கப் பரல்களைக் கொண்டது” என்று வாதாடினாள்.


102. நெற்பயிர்களைக் கடித்துச் சேதம் விளைவித்தது எது?


எலி



103. அரசவையின் விகடகவி யார்?


 தெனாலிராமன்



104. எலிகளைப் பிடிக்க வீட்டுக்கொரு பூனை கொடுக்கலாம் என்றார் அமைச்சர். 



105. பசுவிற்கு தீனிபோட பணம் வழங்கப்பட்டது.



106. தெனாலிராமன் பூனைக்கு சூடான பால் வைத்துக் குடிக்க வைத்தார்.



107. தெனாலிராமன் பூனை பசியால் வாடியது. 



108. குடிமக்கள் தாங்கள் வளர்த்த பூனையை அரண்மனைக்கு கொண்டு வந்தார்கள்.



109. தெனாலிராமன் பூனை பாலைக் கண்டால் ஓட்டம் பிடித்தது.



110. காவலன் எந்தக் கிண்ணத்தில் பாலை வைத்தான்? 


வெள்ளி



111. அரசரிடம் குடிமக்கள் அளித்த புகார் என்ன?



எலிகள் தங்களுக்குத் தொல்லை தருவதாகவும், பயிர்களையும், தானியங்களையும் தின்று சேதப்படுத்துவதாகவும், அவைகளை ஒழித்தால்தான் தங்கள் வாழ்வு வளமாக இருக்கும் என்றும் அரசரிடம் குடிமக்கள் முறையிட்டனர்.


 


112. எலிகளை ஒழிக்க அரசர் எடுத்த முடிவு என்ன?



அரசர் எலிகளை ஒழிக்க, ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பூனையையும், பூனைக்கு பால் ஊற்றி வளர்க்க ஒரு பசுவையும் கொடுக்கலாம் என முடிவு செய்தார்.



113. தெனாலிராமன் பூனையை அரண்மனைக்கு எப்படி எடுத்து வந்தார்?



தெனாலிராமன் பூனை உடல் மெலிந்த நிலையில், எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில், இறக்கும் தருவாயில் அரண்மனைக்கு எடுத்து வந்தார்.



114. அரசர் காவலனிடம் என்ன சொன்னார்?



அரசர் காவலனிடம் பூனைக்கு கொடுக்க பால் கொண்டு வருமாறு சொன்னார்.


 


115. அரண்மனையில் பூனை என்ன செய்தது?



அரண்மனையில் பாலைப் பார்த்ததும் பயந்து பூனை ஓட்டம் பிடித்தது.



116. தெனாலிராமன் பசுவின் பாலை யாருக்குக் கொடுத்தார்? 


உணவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு தெனாலிராமன் பசுவின் பாலைக் கொடுத்தார்.



117. கிடைத்துள்ள தொன்மை நூல் எது?



 தொல்காப்பியம்



118. தொல்காப்பியம் __ அதிகாரங்களை கொண்டுள்ளது.


 


மூன்று அதிகாரங்கள்



119. பாட்டும் தொகையுமாக அமையும் நூலை எப்பெயரால் அழைப்பர்?



 பதினெண்மேற்கணக்கு



120. எட்டுத்தொகையுள் உள்ளவை யாவை?



புறநானூறு, பதிற்றுப்பத்து



121. திருக்குறளின் சிறப்புகளுல் ஒன்றினைக் கூறுக.



உலகத்தின் தலைசிறந்த அறநூல்.



122. இரட்டைக் காப்பியங்கள் யாவை?


சிலப்பதிகாரம், மணிமேகலை



123. திருத்தக்கத்தேவர் படைத்த நூல் ____.



 சீவகசிந்தாமணி



124. மாணிக்கவாசகர் பாடிய நூல் எது?



திருவாசகம்



125. பன்னிரண்டாம் திருமுறையாக விளங்கும் நூலின் பெயர் என்ன?


 


பெரியபுராணம்



126. திருப்பாவை பாடியவர் யார்?



ஆண்டாள்



127. பிள்ளைத்தமிழ் பாடுவதற்குரிய பருவங்கள் எத்தனை?



பத்து பருவங்கள்



128. ஜெயங்கொண்டார் இயற்றிய நூல் எது?



கலிங்கத்துப்பரணி



129. உழவர்களின் வாழ்க்கை முறை கூறும் நூலின் பெயரைக் குறிப்பிடுக.


 


பள்ளு இலக்கியம்



130. திருக்குற்றாலக் குறவஞ்சியை இயற்றியது யார்?



திரிகூட இராசப்பக்கவிராயர்



131. தமிழில் தோன்றிய முதல் புதினம் எது?


 


பிரதாப முதலியார் சரித்திரம்



132. சமுதாயப் புதினங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.



குறிஞ்சிமலர், பொன்விலங்கு


 


133. பாஞ்சாலி சபதத்தை இயற்றியவர் யார்?



பாரதியார்



134. பாரதிதாசன் எழுதிய கவிதை நூல்களைக் குறிப்பிடுக.



குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு 



135. சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களின் சிறப்புகளை எழுதுக.


இன்றுவரை கிடைத்துள்ள தொன்மை நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்கிற மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது. இது ஒரு இலக்கண நூல் ஆகும்.


பாட்டும் தொகையுமாக அமையும் நூலை பதினெண்மேற்கணக்கு என அழைக்கிறோம். இவற்றை சங்க இலக்கியங்கள் என்பர். பாட்டு என்ற நிலையில் பத்து பாடல்கள் உள. இவற்றில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாகும். 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. மலைபடுகடாம் என்கிற கூத்தராற்றுப்படை என்பனவாகும். மூன்று அகப்பாடல்கள் ஆகும். அவை 1. குறிஞ்சிப்பாட்டு, 2. முல்லைப்பாட்டு, 3. பட்டினப்பாலை. இரண்டு புறப்பாடல்கள் ஆகும். அவை 1. நெடுநல்வாடை, 2. மதுரைக்காஞ்சி. இப்பாடல்கள் சங்க மன்னர்களைப் பற்றியும், சங்க மக்களின் வாழ்க்கை பற்றியும் கூறுகின்றன. 



136. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்களை எழுதுக.


திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அடங்கும்.



137. இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவதற்கான காரணத்தை விளக்குக.


பூம்புகார் நகரில் வாழ்ந்த கோவலன் என்கிற வணிகன் கதையை மையமாக வைத்து சிலப்பதிகாரம் என்கிற காப்பியம் அமைந்துள்ளது.  



சிலப்பதிகாரத்தை தொடர்ந்து கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாறு கூறும் மணிமேகலை காப்பியம் அமைந்துள்ளது. ஆகையால் இவ்விரு நூல்களையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கிறோம். 



138. சிற்றிலக்கியங்கள் - குறிப்பு வரைக.



சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் எனவும் கூறப்படும். இவ்வகை இலக்கியங்களில் பிள்ளைத்தமிழ், பரணி, உலா, தூது, கலம்பகம், பள்ளு போன்றவை அடங்கும்.  



பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியம் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு நிலைகளில் ஆமையும். பாடப்படும் தலைவனை குழந்தையாகக் கருதி பத்து பருவங்களைக் அடிப்படையாகக்கொண்டுப் பாடப்பெறும்.  



பரணி இலக்கியமாவது ஆயிரம் யானைகளைக் கொன்று போர்க்களத்தில் வெற்றி பெற்ற மன்னனைப் புகழ்ந்து பாடுதல் ஆகும். 



உலா இலக்கியம் என்பது தலைவனையோ அல்லது இறைவனையோ வீதியில் உலா வரும்போது காணும் பெண்கள் மகிழ்ந்து பாடுவதாக அமைந்த நூல் ஆகும். 



கலம்பகம் என்னும் இலக்கிய வகையில் மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிப் பாடப்பட்ட நந்திக்கலம்பகம் முதல் நூலாகும். 



தூது என்ற இலக்கியம், தலைவனோ, தலைவியோ தன் கருத்தை மற்றவர்க்கு தெரிவிக்க புறா, வண்டு, கிளி போன்றவற்றைத் தூதுப் பொருளாகத் தேர்ந்தெடுத்து பாடும் வகையில் அமையும் இலக்கியம் ஆகும். 



பள்ளு இலக்கியமாவது உழவர்களின் வாழ்க்கை முறையை கூறும் இலக்கியமாகும்.



139. இலக்கிய வடிவங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து எழுதுக.



தற்காலத் தமிழ் இலக்கியங்கள் அச்சேறிய பெருமைக்கு உரியவை. உரைநடை வளர்ச்சி காரணமாக இலக்கியங்களின் வடிவங்களில் மாறுதல்கள் தோன்றின. அவை புதினம், நாடகம், சிறுகதை, கவிதை ஆகியவையாகும்.  



இவ்வகையில் முதலில் தமிழில் தோன்றிய புதினம் பிரதாபமுதலியார் சரித்திரம் ஆகும். மேலும் புதினங்கள் வரலாற்றுப் புதினங்கள், சமூகப் புதினங்கள் என பல வகைப்படுத்தப்படுகின்றன. 



140. இராமலிங்கர் பிறந்த ஊர் எது?



மருதூர்



141. இராமலிங்கரின் உடன்பிறந்தோர் எத்தனைப் பேர்?



 நான்கு பேர்



142. இராமலிங்கரின் பெற்றோர் யார்?



 இராமையாபிள்ளை - சின்னம்மாமள்



143. இராமலிங்கர் 1823 ஆம் ஆண்டில் பிறந்தார்.



144. தீட்சதர் இராமலிங்கரை எவ்வாறு பாராட்டினார்?



ஞானக்குழந்தை என்று பாராட்டினார். 



145. கணவர் இறந்ததும் இராமலிங்கத்தின் தாய் எந்த ஊருக்குச் சென்றார்?



 பொன்னேரி



146. இராமலிங்கர் சென்னை முருகன் கோயிலில் பாடிய பாடல்கள் யாவை?



 தெய்வ மணிமாலை



147. இராமலிங்கர் நிலைக்கண்ணாடியில் முருகனை கண்டது எத்தனை வயதில்?



 ஒன்பது வயதில்



148. இராமலிங்கரின் அண்ணன் வழக்கமாக நிகழ்த்தும் சொற்பொழிவு யாது?



 பெரிய புராணச் சொற்பொழிவு



149. சொற்பொழிவு நடைபெற்ற இடம் யாது?



செட்டியார் வீடு



150. திருவொற்றியூர் கோயில் இறைவன் பெயர் தியாகராசப் பெருமாள் என்பதாகும்.



151. இராமலிங்கர் எழுதிய முதல் உரைநடை நூல் யாது?



மனுமுறை கண்ட வாசகம்



152. திருவொற்றியூர் கோயில் இறைவியின் பெயர் யாது?



 வடிவுடை அம்மன்



153. இராமலிங்கர் சிவலிங்கமாக மாற்றிய பொருள் யாது?



மணல்



154. வட்டாட்சியர் பெயர் என்ன?



அப்பாசாமி பண்டாரி யார்



155. வட்டாட்சியர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?



மஞ்சக்குப்பம்



156. மக்களின் பசியைப் போக்க இராமலிங்கர் அமைத்தது எது?



தருமச்சாலை



157. தருமச்சாலை எவ்வூரில் அமைக்கப்பெற்றது?



வடலூர்



158. சமீன்தாரின் முதல் மனைவி எதனால் துன்புற்றாள்?



 பேய் பிடித்ததால் துன்புற்றார்



159. சமீன்தாரின் இரண்டாம் மனைவிக்கு ஏற்பட்ட நோய் எது? 



மகோதரம் என்ற நோய்



160. வள்ளலாரின் அன்பர்களில் இரசவாதத்தை செய்து பார்த்தவர் யார்?



 வேம்பையர்



161. இரசவாதவித்தை என்றால் என்ன?



உலோகங்களைப் பொன்னாக மாற்றி காட்டும் வித்தை இரசவாத வித்தை.



162. இராமலிங்கரின் பாடல்கள் எந்தப் பெயரால் தொகுக்கப்பட்டுள்ளன?



திருவருட்பா



163. திருவருட்பாவைத் தொகுத்தவர் யார்?



 தொழுவூர் வேலாயுத முதலியார்



164. சிதம்பரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா எது?


ஆனித் திருமஞ்சன விழா



165. வள்ளலார் திருக்காப்பீட்டுக் கொண்ட நாள் எது?  



03/01/1874


166. இராமலிங்கரின் பிறப்புப் பற்றி எழுதுக.



இராமலிங்கர் 05.10.1823 இல் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு வடக்கே உள்ள மருதூரில் பிறந்தார். அவர் இராமையாப் பிள்ளை. தாயார் பெயர் சின்னம்மாள். இவர்களின் ஐந்தாவது மகவாகப் பிறந்தார்.



இராமலிங்கத்தின் தந்தையார் இராமையாப் பிள்ளை குடும்பத்தாருடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்று நடராசப் பெருமானை வணங்கினார். நடராசப் பெருமானை வழிபட்ட பின்பு, தீட்சிதர் சிதம்பர இரகசிய திரையை தூக்க, கைக்குழந்தையாகிய அடிகள் தரிசித்தார்.



167. இராமலிங்கரின் சொற்பொழிவாற்றும் திறனை எழுதுக.



இராமலிங்கரின் அண்ணன் சபாபதி தினமும், சென்னையில் உள்ள ஒரு செட்டியார் வீட்டிற்கு, பெரியபுராணம் சொற்பொழிவு நடத்துவதற்கு செல்வார். ஒரு நாள் சபாபதிக்கு உடல்நலம் சரியில்லாத செய்தியை செட்டியாரிடம் சென்று கூற இராமலிங்கர் சென்றார்.  



செட்டியார் இராமலிங்கத்திடம் ஒரு பாடலைக் கூறி, அப்பாடலுக்கு விளக்கமளிக்குமாறு கேட்டார். இராமலிங்கர் அப்பாடலுக்கு அளித்த விரிவான விளக்கம், செட்டியாரை கவர்ந்தமையால் இராமலிங்கரே சொற்பொழிவு செய்ய வேண்டும் என வேண்டினார். சபாபதியும், இராமலிங்கர் சொற்பொழிவு செய்யும் போது மறைந்து நின்று கேட்டு, தன் தம்பியின் அறிவை எண்ணி வியந்து மகிழ்ந்தார்.



168. இராமலிங்கர் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?


மனுமுறை கண்ட வாசகம், தொண்டை மண்டலச் சதகம்.



169. இராமலிங்கரின் மனித நேயச் சிந்தனையை எழுதுக.



மஞ்சக்குப்பம் என்ற ஊரில் வட்டாட்சியராக வேலைப் பார்த்த வேங்கட சுப்பையர் வெளியே வரும்போது, ஒருவர் கொம்பை ஊதிக்கொண்டு அவர் வருவதை தெரிவித்து வண்டியின் முன் ஓடி வரும் வழக்கம் இருந்தது. இதனைக் கண்ட இராமலிங்க மனம் வருந்தி வட்டாட்சியரிடம் எடுத்துரைத்ததால், வட்டாட்சியர் இந்த வழக்கத்தை நிறுத்திவிட்டார். இது இராமலிங்கத்தின் மனிதநேயச் செயலைக் காட்டுகின்றது.



170. இராமலிங்கரின் உயிர் இரக்கப் பண்பை விவரிக்க.



வேட்டவலம் என்ற ஊரில் வாழ்ந்த சமீன்தார், அப்பாசாமி பண்டரியார் பிற உயிரினங்களை வேட்டையாடி மகிழ்பவர். அவருக்கு வாய்த்த இரு மனைவியரில் ஒரு மனைவிக்கு பேய்ப் பிடித்திருந்தது. மற்றொரு மனைவிக்கு மகோதரம் என்ற நோய் இருந்தது. 


ஒரு நாள் இராமலிங்கத்திடம் தன் குறைகளை அப்பாசாமி முறையிட்டதால், இராமலிங்கர் அப்பாசாமி வீட்டிற்குச் சென்றார். இராமலிங்கர் வீட்டு வாசலில் வரும்போது முதல் மனைவிக்கு பிடித்திருந்தப் பேய் ஓடிவிட்டது. இரண்டாம் மனைவிக்குத் திருநீர் கொடுத்தார். அவனுடைய நோயும் நீங்கிவிட்டது. 



இதைக்கண்ட சமீன்தார் மிக்க மகிழ்ச்சியுற்று, அன்று முதல் வேட்டையாடுவதை விட்டுவிட்டார். இது இராமலிங்கரின் உயிர் இரக்கச் சிந்தனையைக் காட்டுகின்றது.



171. இராமலிங்கரின் பிழை பொறுக்கும் பண்பை எழுதுக.



வேம்பையர் என்பவர் இராமலிங்கரின் உடன் இருந்து இரசவாத வித்தையை தெரிந்து கொண்டு, யாருக்கும் தெரியாமல் இரசவாத வித்தையைச் செய்தார். அப்போது அவருடைய கண்கள் ஒளி மங்கி விட்டன. இறுதியில் இராமலிங்கரிடம் வந்தார். இராமலிங்கர் அவர் பிழையைப் பொறுத்துச் சிறிது தண்ணீர் கொடுத்து அவரின் கண்களை கழுவச் செய்து, அவருக்கு மீண்டும் கண் பார்வையை கொடுத்தார். இது இராமலிங்கரின் பிழைப் பொறுக்கும் பண்பைக் காட்டுகின்றது.



172. வடலூரில் சிதம்பர தரிசனத்தை வள்ளலார் எவ்வாறு கண்டார்?



இராமலிங்கர் வடலூரில் உள்ள தருமச்சாலையில், ஓரிடத்தில் ஒரு திரையைத் தொங்கவிட்டு அன்பர்களை உள்ளே வந்து பார்க்குமாறு அழைத்தார். உள்ளே வந்த அன்பர்கள் திரையில் சிதம்பர ஆனித்திருமஞ்சன விழா நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்





Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil