The cat, partridge and the hare story in Tamil கௌதாரி ஒன்று பெரிய புதரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதற்கு மிகவும் பசி எடுத்தது. அதனால் அது இரை தேடி மிக தூரமாக பறந்து சென்றது. அங்கு பச்சை பசேல் என்று வயல் ஒன்றனைக் கண்டது. வயலில் உள்ள நெற்கதிர்கள் வயிறு நிறையத் தின்றது. அங்கேயே அது தங்கிவிட்டது. நீண்ட நாளாகியும் கௌதாரி, புதருக்கு திரும்பவில்லை. எனவே, கௌதாரியின் புதரில் வெள்ளை முயல் ஒன்று வாழத் தொடங்கியது. அறுவடைக்காலம் முடிந்ததும், கௌதாரி தன் இருப்பிடத்திற்குத் திரும்பியது. அங்கு முயல் இருப்பதனைப் பார்த்து கோபம் கொண்டது. முயலிடம், 'இது என்னுடைய இடம், நீ வெளியே போ' என்று கடுமையாக கூறியது. 'நான் இந்த இடத்தில் பல நாட்களாக இருக்கிறேன். இந்த இடம் எனக்கே சொந்தம்' என்று கூறியது முயல். புதர் யாருக்கு உரியது என்பதனை முடிவு செய்ய, நாம் ஒரு நடுவரை தேர்ந்தெடுப்போம். அங்கு ஒரு வயதான பூனை ஒன்றனைக் கண்டன. அப்பூனை, உண்ட மயக்கத்தில் கண்மூடி உட்கார்ந்து இருந்தது. இவரிடம் கேட்போம், நமக்கு நீதி கிடைக்கும் என்று கௌதாரியும் முயலும் பேசிக் கொண்டன. இருவரும் பேசிக் கொண்ட...