கப்பலோட்டிய தமிழன் - கட்டுரை
கட்டுரை - கப்பலோட்டிய தமிழன் - வ.வு. சிதம்பரம் பிள்ளை குறிப்பு சட்டகம் முன்னுரை பிறப்பு கல்வி திருமண வாழ்க்கை நாட்டுப்பற்று தண்டனை தமிழ் தொண்டு முடிவுரை முன்னுரை இந்திய விடுதலைக்காக போராடிய பல தியாகிகளுள் ஒருவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ. வு. சிதம்பரனார் பற்இக்கட்டுரையில் காண்போம். பிறப்பு வ. உ. சிதம்பரனார் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் உலகநாதப்பிள்ளைக்கும் பரமாயி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். கல்வியும் வாழ்வும் வ. உ. சிதம்பரம் முதலில் திண்ணைப்பள்ளிக் கூடத்தில் படித்தார்; பின்னர் இவரின் தந்தையார் இவருக்கெனவே உருவாக்கிய பள்ளியில் பயின்றார். இளமையில் விறுவிறுப்பாகவும் துடிப்பாகவும் இருந்தார். பல விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டார். தமிழின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவராக விளங்கினார். பள்ளிக் கல்வியை முடித்தார். இவர் தந்தையாரின் முயற்சியால் ஒட்டப்பிடாரம் வட்டத்தில் அலவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். இப்பணியில் சிதம்பரத்தால் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை. திருச்சிராப்பள்ளியில் சட்டம் பயின்றார். 1895 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார். இவரின் பாட்டனார் வழக்...